Sunday 10 December 2017

உங்கள் ஏடிஎம் பணப் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்ததா? புகார் அளித்தால் ரூ.100 இழப்பீடு கிடைக்கும்?

என்ன தான் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வந்தாலும் சில நேரங்களில் ஏதேனும் கோளாரால் பரிவர்த்தனை தோல்வியில் முடிவது என்பது இயல்பு, அது மட்டும் இல்லாமல் சில முக்கியமான நேரங்களில் தோல்வி அடையும் போது நாம் அடையும் துன்பம் அதிகம்.

இப்படி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அவசர தேவைக்குப் பணம் எடுக்கும் போது பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தால் ஏற்படும் சிக்கலை தவிர்க ஆர்பிஐ முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
தோல்வியில் முடியும் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆர்பிஐ வகுத்துள்ள புதிய வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

இழப்பீடு
ஏடிஎம் இயந்திரங்கள் பணத்தினை அளிக்காமல் வங்கி கணக்கில் இருந்து மட்டும் பணம் பிடிக்கப்பட்டுப் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் அந்தப் பணம் உங்களுக்குத் திருப்பி அளிக்கப்படுவது மட்டும் இல்லாமல் இனி இழப்பீடும் கிடைக்கும்.
  

காலக்கெடு
ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் புகார் அளிக்கப்பட்ட 7 நாட்களில் இதற்கான சிக்கலுக்குத் தீர்வு அளிக்க வேண்டும்.

  

இழப்பீடு எப்போது வழங்கப்படும்?
ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்து வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்படவில்லை என்றால் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
  

புகார்
வாடிக்கையாளர்கள் இதுபோன்ற இன்னல்களில் சிக்கிக் கொள்ளும் போது 30 நாட்களுக்குள் வங்கி கிளைகளில் புகார் அளிப்பதன் மூலம் இழப்பீட்டைப் பெற முடியும்.
  

இழப்பீடுகள் விதியானது எப்போது முதல் செயல்பாட்டில் உள்ளது?
2009-ம் ஆண்டுக்கு முன்பு வங்கி பரிவர்த்தனைகள் தோல்வியின் போது 12 நாட்களுக்குப் பணத்தினைத் திருப்பி அளிக்க வேண்டும் இல்லை என்றால் 30 நாட்களுக்குப் புகார் அளிக்கும் போது 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு வரப்பட்டுள்ளது.
இதுவே தற்போது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.