Thursday 31 August 2017

புளுவேல் கேம் அஎன்ல் எஎன்ன?

ஸ்மார்ட் போன்' குறித்து அதிகம் தெரியாத பெற்றோர்கள் 'புளூவேல்' கேம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த 50 நாள் 'சேலேன்ஜ் கேம்' ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. போனில் 'இன்ஸ்டால்' செய்ததும் விளையாடலாம்.
விளையாடும் நபருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். உதாரணமாக 'உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு.
ரயில்வே டிராக்கில் நில், உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய். அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று. அப்போது தான் நீ விளையாட்டில் வெற்றி பெறுவாய்,' என்றெல்லாம் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும்.
இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொல்லவும் முடியாது, ஏன் என்றால் இந்த 'கேம்'மை இன்ஸ்டால் செய்ததும், உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் உள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போனுக்கு அனுப்பப்படும் என்று மிரட்டல் தகவல் வரும். 'கேம்'மில் டாஸ்க் செல்லும் 'மேப்' நீல திமிங்கலம் வடிவத்தில் இருப்பதால், இதற்கு 'புளூவேல்' என்று பெயர் வைத்துள்ளனர்.
ஸ்மார்ட் போன்களை 'ஹேக்' செய்யக் கூடிய நபர்களால் இந்த கேம் இயக்கப்படுவதால் தான், நம் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு இந்த 'கேம்'மை விளையாடாமல் தவிர்க்க வேண்டும்.

லைசென்ஸ் காணாமல் போய்விட்டது என கவலையா..? இனி இணையத்திலே விண்ணப்பிக்கலாம்.

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்நிலையத்தில் காணாமல் போனதற்கான சான்றுபெற்று உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. அதனால், ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்று பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்றுபெறும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, eservices.tnpolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.‌

ரிசர்வ் வங்கி கையில் சிக்கிய 10 நிறுவனங்கள்..!

ரிசர்வ் வங்கி இந்திய வங்கி அமைப்பில் குவிந்துக்கிடக்கும் வராக்கடனை தீர்க்க 40 நிறுவனங்களை கண்டறிந்து மீட்டெடுக்கும் முயற்சியில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் படி மொத்த வராக்கடனில் 25 சதவீத மதிப்பு உடைய 12 பெரிய நிறுவனங்களை பட்டியலிட்ட ரிசர்வ் வங்கி தற்போது மேலும் 10 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.

முதல் பட்டியல்
முதல் பட்டியலில் எஸ்ஸார் ஸ்டீல், புஷன் ஸ்டீல், புஷன் பவர், அலோக் இன்டஸ்ட்ரீஸ், எலக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ், மோனெட் இஸ்பெட் மற்றும் ஏபிஜி ஷிப்யார்டு ஆகிய நிறுவனங்கள் உட்பட சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 12 நிறுவனங்களை வெளியிட்டது.

2வது பட்டியல்
இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் 10 நிறுவனங்களை வெளியிட்டுள்ளது இதில் வீடியோகான், ஜேபி அசோசியேட்ஸ், ஐவிஆர்சிஎல், விஷால் ஸ்டீல், உத்தம் கல்வ், காஸ்டெக்ஸ், ருச்சி சோயா, நாகர்ஜூனா ஆயில், எஸ்ஈஎல், யூனிட்டி இன்பராபிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை அறிவித்துள்ளது.


22 நிறுவனங்கள்
இதுவரை ஆர்பிஐ வெளியிட்ட 2 பட்டியலில் சுமார் 22 நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

80 சதவீத வராக்கடன்
மேலும் ரிசர்வ் வங்கி பட்டியலிட உள்ள 40 நிறுவனங்களின் 80 சதவீத சொத்து வராக்கடனாக உள்ளதால், முதலீட்டாளர்கள் இந்நிறுவனம் மீதான முதலீட்டை குறைக்க திட்டமிட்டு வருகின்றனர்.

பங்குச்சந்தை நிலவரம்



Vetrikodikattucommerce

Economic activity to expand 7.3% this fiscal: RBI

Economic activity as measured by Gross Value Added (GVA) is expected to expand by 7.3 per cent in the current fiscal, up from 6.6 per cent in 2016-17, the Reserve Bank said noting the risks are evenly balanced.
The headline inflation, it said, is expected to be in the range of 2-3.5 percent in the first half of 2017-18 and 3.5-4.5 percent in the later part.
Global growth is gaining traction in 2017-18 with the recovery, driven primarily by a cyclical upturn in investment, manufacturing and trade, the RBI said in annual report for 2016-17.
Favourable domestic conditions are mainly expected to enable a quicker pace of overall economic activity during the year, it said.
While growth is again expected to be consumption-led, continuing remonetisation should enable a pick-up in discretionary consumer spending, especially in cash-intensive segments of the economy, the central bank said.
The report said that expected normal monsoon and the resultant replenishment of reservoirs, policy initiatives of the government such as hike in MSPs and increasing crop insurance coverage are likely to help in boosting crop production and supporting rural demand.
"On the whole, real GVA (Gross Value Added) growth is projected to rise from 6.6 per cent in 2016-17 to 7.3 percent in 2017-18, with risks evenly balanced," the RBI said.
It also noted that early indicators for 2017-18 based on IIP and the performance of eight core industries point to subdued industrial activity.
"The prospects for the manufacturing sector remain uncertain in the short term in view of the implementation of GST," it said, adding the services sector is, however, expected to perform better during the year.
The central bank further said that in the fiscal sphere, while the gains to growth, efficiency and tax buoyancy over the medium term from GST are unequivocally recognised, near- term uncertainties with regard to revenue mobilisation,which could impact fiscal consolidation at both centre and state levels, cannot be ruled out as this fundamental reform gains pan-India traction.
Post demonetisation, the pace of monetary transmission from the policy repo rate to banks' lending rates accelerated significantly, aided by the increase in the share of low-cost current account and saving account (CASA) deposits in bank funding, the report said.
However, the transmission to actual lending rates was uneven across sectors, reflecting sector-specific credit risk dynamics, it added.
The report further said the announcement of farm loan waivers by four state governments (so far in 2017-18) and the potential announcement by several others pose a major fiscal risk over the medium term.
On the banking sector, the report said as of end-March 2017, 12.1 per cent of the advances of the banking system were stressed. A sharp increase in provisioning for NPAs adversely impacted profitability of banks, with the public sector banks as a whole continuing to incur net losses during 2016-17.
The report said the actions of the government authorising the RBI to direct banking companies to resolve specific stressed assets by initiating insolvency resolution process are expected to significantly improve the resolution of stressed assets, particularly in consortium or multiple banking arrangements.
The RBI has directed banks to file proceedings under the Insolvency and Bankruptcy Code (IBC) in respect of 12 accounts comprising about 25 per cent of the current gross NPAs of the banking system.Vetrikodikattucommerce

’டிஜிட்டல்’ பண பரிவர்த்தனைக்கு மாறுங்க!



’அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், ’டிஜிட்டல்’ முறையை பின்பற்ற வேண்டும்’ என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய மனிதவள அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதன் விபரம்:

அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், பணப் பரிவர்த்தனையை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை, கட்டாயம் பின்பற்ற வேண்டும்

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் வசூல், வணிக நிறுவனங்களுக்கான செலவுகள், ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் செலவுகள் என, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனையும் ரொக்கமாக மேற்கொள்ளக் கூடாது

அனைத்து மாணவர்களும், விடுதி கட்டணம், உணவு கட்டணத்தை, டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். இதற்கு, ’ஆன் - லைன்’ வங்கி முறை, வங்கி பரிவர்த்தனை அட்டையான, ’டெபிட், கிரெடிட்’ கார்டு மற்றும் ’பிம் மொபைல் ஆப்’ போன்ற முறைகளை பயன்படுத்தலாம்

இதற்காக, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், பொறுப்பு அதிகாரியை நியமித்து, டிஜிட்டல் முறை குறித்து, நிறுவன விதிகள் வகுக்க வேண்டும். இது குறித்து, தஞ்ஞி.ணஞீணீட்@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட் என்ற, இ - மெயிலில் அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Vetrikodikattucommerce

கரன்சி நிலவரம்

Vetrikodikattucommerce

30.8.17 மாலை 5:00 மணியளவில்
நாடு பணம் இந்திய ரூபாயில்
அமெரிக்கா டாலர் 63.99
ஐரோப்பாயூரோ 76.43
பிரிட்டன் பவுண்டு82.70
ஜப்பான் யென் 0.58
சிங்கப்பூர் டாலர்47.18
மலேஷியா ரிங்கட் 14.98
சவுதி ரியால் 17.06
குவைத்தினார் 212.20
ஆஸ்திரேலியா டாலர் 50.88
சீனா ரென்­மின்பி9.70
எமிரேட் திர்காம் 17.41
கனடா டாலர் 51.04
இலங்கைரூபாய் 0.41

செல்லாத ரூ.500 - 1,000 நோட்டுகள்.. 99 சதவீதம் 'டிபாசிட்'

செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்துக்கு பின், வங்கிகளில், 99 சதவீத, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளன.ரிசர்வ் வங்கி, 2016 - 17 நிதியாண்டுக்கான, ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்விபரம்: நாடு முழுவதும், 632.6 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகள்புழக்கத்தில் இருந்தன. கடந்தாண்டு நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டபோது, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலை விபரம்

 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.66 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.06 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,31) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.71.66 காசுகளாகவும், டீசல் விலை 4 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.06 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,31) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Vetrikodikattucommerce

NPS கணக்கைத் தொடங்குவது எப்படி?

என்பிஎஸ் எனப்படும் தேசீய ஓய்வூதியத் திட்டக் கணக்கை தொடங்க இப்பொழுதெல்லாம் வெறும் 25 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. தேசீய பாதுகாப்பு வைப்புநிதி கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் அங்கீகாரம் பெற்ற 17 வங்கிகளின் வரிசைப் பட்டியலில் உள்ள ஒரு வங்ககியில் உங்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால், மேலும் உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் இணையத்தில் enps.nsdl.com. என்கிற இணையத்தளத்திற்கு சென்று என்பிஎஸ் க்கு விண்ணப்பிக்கலாம். 

தேவையான ஆவணங்கள் 

என்பிஎஸ் கணக்கை திறக்கும் போது, உங்களுக்கு ஒரு மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள், மற்றும் ஒரு செயல்பாட்டில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு (இணைய வங்கி சேவை வசதியுடன்) ஆகியவை தேவை.மேலும் ஆதார் அல்லது பான் கார்டும் தேவைப்படும். 

என்பிஎஸ் கணக்கைத் தொடங்குவது எப்படி?

 ஒரு என்பிஎஸ் கணக்கை தொடங்க கீழே விளக்கப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றுங்கள்:

 enps.nsdl.com என்கிற இணைய முகவரிக்குள் சென்று NSDL's eNPS என்கிற இணையதளத்திற்குள் செல்லுங்கள். 

அங்குள்ள பதிவு என்கிற தேர்வை சொடுக்கவும்.

 ஒரு புதிய திரை திறக்கும். அங்கு ‘இணைய சந்தாதாரர் பதிவு' என்கிற பக்கத்தில் ‘புதிய பதிவு' என்று தேர்வு செய்யவும்.   

சுயவிவரம் விண்ணப்பதாரரின் தகுதி நிலை, வங்கிக் கணக்கு வகை போன்ற உங்கள் சுயவிவரங்களுக்கு பொருத்தமான தேர்வுகளை செய்யுங்கள். 

உங்களிடம் ஆதார் கார்டு இருந்தால் ‘ஆதார்' என்கிற தேர்வை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ‘பான் கார்டு' என்கிற தேர்வையும் தேர்ந்தெடுக்கலாம்.  

 ஆதார் நீங்கள் ஆதாரைத் தேர்ந்தெடுத்திருந்தால் தொடர்ந்து செயல்பட கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளை பின்பற்றவும்.

 ‘ஓடிபி ஐ உருவாக்கவும்' என்கிற தேர்வை சொடுக்கவும். 

அனைத்து விவரங்களையும் உள்ளிடுங்கள், ஓடிபி எனப்படும் ஒரு முறை கடவுச் சொல் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும்.  

 கட்டாய தகவல்கள் ஆதார் தகவல் தளத்தில் உங்கள் சுயவிவரங்களை அமைப்பு தேடும். 

ஆன்லைன் படிவத்தில் உள்ள அனைத்து கட்டாய தகவல்களையும் உள்ளிடவும். 

உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றம் செய்யவும். 

ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நுழைவாயிலை அடைய விவரங்களை சமர்ப்பிக்கவும். 

உங்கள் வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது இணைய வங்கி வசதி மூலம் முதல் பங்களிப்பைச் செலுத்துங்கள்.   

ஒருவேளை நீங்கள் பான் கார்டை தேர்ந்தெடுத்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள் பான் கார்டை தேர்ந்தெடுத்திருந்தால் பின்வரும் படிநிலைகளை பின்பற்றவும். பட்டியலிலிருந்து நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தேர்ந்தெடுங்கள். 

உங்கள் வங்கி உங்கள் கேஒய்சி விவரங்களை சரிபார்க்கும். சரிபார்ப்பிற்கு உங்கள் வங்கி உங்கள் கணக்கிலிருந்து ரூ. 125 ஐ ஒரு முறை கட்டணமாக எடுத்துக் கொள்ளும். 

வங்கிப் பதிவுகளுடன் உங்கள் பெயர் மற்றும் முகவரி பொருந்தியிருக்க வேண்டியது முக்கியமானதாகும். 

இது கேஒய்சி சரிபார்ப்பிற்கு அத்தியாவசியமானதாகும். உங்கள் புகைப்படத்தையும் கையொப்பத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள்.   

ஆன்லைனில் கட்டணம் செலுத்துங்கள் வெற்றிகரமாகப் பணம் செலுத்திய பிறகு உங்கள் பிரான் (PRAN) உருவாக்கப்படும். 

தேசீய ஓய்வூதியத் திட்டம் தேசீய ஓய்வூதியத் திட்டம் குடிமக்களுக்கு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நிதி சார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் வரிச் சலுகைகளும் உள்ளன.

 இந்தத் திட்டம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு வழக்கமான வருமான ஆதாரமாகச் செயல்படும். என்பிஎஸ் இன் கட்டணமற்ற எண் என்பிஎஸ் கணக்கை தொடங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் நீங்கள் என்பிஎஸ் உதவி இணைப்பு எண்ணான 1800110708 என்கிற எண்ணை அழைக்கலாம். இந்த எண் ஏற்கனவே திட்டத்தில் இணைந்திருக்கும் சந்தாதாரர்கள் மற்றும் இணையவிருக்கும் மறைமுக சந்தாரர்களின் கேள்விகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கட்டணமற்ற எண் ஆகும்.

Vetrikodikattucommerce

ஆதார் - பான் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பு..!

மத்திய அரசு புதன்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த பதில் ஒன்றில் பொது விநியோக திட்டங்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்பதைச் செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து டிசம்பர் 31-ம் தேதியாக நீட்டித்துள்ளது. இதே போன்று ஆதார் - பான் இணைப்பும் ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இணைப்பில் சிக்கல் 

ஆதார் - பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்னும் போது பலரின் பெயர்கள் இரண்டு கார்டுகளில் வெவ்வேறு விதமாக இருப்பதினால் தரவு ஒன்றாக இல்லை என்று இணைப்பு நிராகரிக்கப்படுகின்றது. வழக்கு ஒத்திவைப்பு உச்ச நீதி மன்றம் ஆதார் குறித்த வழக்கை வருகின்ற நவம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. கருப்புப் பணம் மத்திய அரசு பான், ஆதார் இணைப்பைச் செய்வதன் மூலம் கருப்புப் பணத்தினைப் பெறும் அளவில் குறைக்க முடியும் என்று நம்புகின்றது. 

வருமான வரி தாக்கல் 

அதுமட்டும் இல்லாமல் ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அதார் - பான் இணைப்புக் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீட்டிக்க வாய்ப்பு 

பொது நலத் திட்டங்களுக்கு ஆதார் கார்டு இணைப்பை நீட்டித்து உள்ளது போன்று பான் - ஆதார் இணைப்பிற்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 31 அல்லது செப்டம்பர் 1- தேதி வெளியிடப்படலாம்.
Vetrikodikattucommerce

Wednesday 30 August 2017

99 சதவிகித ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி தகவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குக்குப் பின்னர் 1.4 சதவிகிதம் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

Five money things you must do this festive season

Arrival of Ganapati marks the beginning of the festive season in India. It is followed by Navaratra, Diwali and Christamas offering us many opportunities to splurge. Grand online sale, never before discounts, buy one get one free offers lure buyers. It is perfectly all right to treat oneself, but do not go overboard, say experts. Many times individuals go overboard with their festive spending and end up in debt trap. Here are five things you must do this festive season to ensure that you do not land in debt at the end of festive season.

Plan and purchase

“Distinguish between needs and wants. Avoid buying things that you do not need. This will save you a lot of money,” says Pankaj Mathpal, founder of Mumbai based Optima Money Managers. Buying things that are not required ruins one's finances. “Avoid buying something just because it is available on EMI,” he adds.

You should ideally make a list of things you will be buying this festive season. Sticking to the shopping list reduces the chance of impulse buying. Impulse shopping is one of the reasons behind accumulation of debt. “If you have saved money for your festive shopping, you enjoy upfront payment discounts. Such discounts are not available if you opt for EMI schemes,” says Kiran Telang, founder and director of Mumbai based Dhanayush Capital Advisors.

Is there a real sale?

Discounts are one of the obvious shopping ‘musts’ on e-commerce portals and brick and mortal retail stores. But do not jump the gun. Check if there is a real discount on offer. To do this you may note down the price of the gadget you intend to buy today and compare the prices when the sale is announced. There are many price comparison websites available that help you do so.

No impulse borrowings

The tenets of financial planning recommend buying things only out of your savings. However, many of us do not save but seek instant gratification. In such circumstances it becomes imperative to borrow. “Use credit cards wisely and pay your bills in full on time. Instead of salary advances it makes sense to use credit cards if you are sure you can pay back on time,” says Jitendra PS Solanki, an independent financial planner.

Credit card outstanding if not paid in full before the due date attracts interest at 3 percent per month in addition to the late fee charged by the card issuing bank. But if you time your spending right, you can enjoy up to 40-45 days of interest free money. Pay it in full before the due date and you are home.

If you opt for salary advance loans then you end up paying as high as 2 percent interest for less than a month. This can be avoided using credit cards, provided you are a disciplined person. If you still need money, compare and raise personal loans. However, negotiate hard on processing fee and repayment charges. It will minimize the adverse impact on your finances. More important- try to pay down high cost personal loans as soon as possible.

Gift it right

Try to pick the right gifts which will be useful to the person to whom you are gifting. “Go for financial gifting wherever possible. Even gold coins are good gifts as they are assets for the receiver,” says Pankaj Mathapal. Money transferred to your family members as gift is exempt from income tax. You can use it to your advantage to empower your family members.

Donate & enjoy tax benefits

While gifting we should also not forget those who are less fortunate. “You should ideally give back to the society. Identify a good cause such as education or healthcare and donate,” says Kiran Telang. Some donations such as contributions to Prime Minister’s National Relief Fund and National Defence Fund fetch you income tax benefit under section 80G of Income Tax Act. The donations specified in section 80G are eligible for deduction up to either 100% or 50%.

In this festive season you should also start saving for the festive season next year, if you have not been saving already. This will help you build corpus and achieve all your financial goals in a time bound manner without much stress.

ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. 
 நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என,மத்திய அரசு உத்தரவிட்டது.வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது. அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, ஜூலை, 31க்குள், பலர் அதை செய்ய முடியவில்லை.அதைத் தொடர்ந்து, இரு எண்களையும் இணைப்பதற்கான அவகாசம், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டது. அது, நாளையுடன் நிறைவடைகிறது. அதன்பின், வருமான வரி கணக்குதாக்கல் செய்ய முடியாது.

என்ன செய்யலாம்? : இதுவரை இணைக்காதோர், 'income taxindiaefiling.gov.in' என்ற இணையதளத்தில், 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், 'கிளிக்' செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இரு எண்களை இணைக்க முடியும்.இதுபோல், மொபைல் போனில், UIDPAN என முதலில், 'டைப்' செய்து, சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு, பான் எண் ஆகியவற்றை, 'டைப்' செய்து, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால், இணைக்க முடியும்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த முதல் மாதத்தில் மட்டும் 92,283 கோடி வருவாய்.. சொல்கின்றார் அருண் ஜேட்லி!

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது, தற்போது அது நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், எதிர்பார்த்ததை விடக் கூடுதல் வருவாய் முதல் மாதத்தில் கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிச் செலுத்துவோரில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் வருமானத்தைச் சமர்ப்பிக்கவும், தங்கள் வரிக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தவும் இல்லை.

அருண் ஜேட்லி அறிவிப்பு
ஜூலை மாதம் மட்டும் 92,283 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும், 3 கோடியே 9 லட்சம் நபர்கள் வரி தாக்கல் செய்துள்ளதாகவும், மத்திய அரசு 91,000 கோடி ரூபாய் வரையில் மட்டுமே வருவாய் எதிர்பார்த்ததாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.
  

கட்டுப்பாட்டில் உள்ள வருவாய்
ஜிஎஸ்டிக்கு மாறுவது வருவாய் இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அது அச்சத்தைத் தூண்டுவது மட்டுமல்லாமல், இது சீர்திருத்த முன்முயற்சியை ஆதரித்த யூனியன் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கான கைக்குள்ளேயே உள்ளது என்றும் கூறியுள்ளார்.

  

வரி எப்படி மாநிலங்களுக்கு மத்திய அரசுக்குப் பிரிக்கப்படுகின்றது
ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் வரி மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி என்று மூன்று விதமாக உள்ளது. பொதுவாக ஜிஎஸ்டி வரி முறியின் கீழ் ஒரு மாநிலத்திற்கு உள்ளேயே விற்கப்படும் போது மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டி இரண்டும் சமப்பங்காகப் பிறக்கப்பட்டு அளிக்கப்படும். இது ஐஜிஎஸ்டி எனப்படும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-ல் கடைசியில் அந்தப் பொருட்கள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றதோ அந்த மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கு பிரித்து அளிக்கப்படும்.
  

செஸ் வரி எப்படி வசூலிக்கப்படுகின்றது
ஆடம்பர பொருட்கள் மற்றும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பொருட்கள் மீது 28 சதவீத வரி மட்டும் இல்லாமல் செஸ் வரி கூடுதலாக விதிக்கப்படும். இந்தச் செஸ் ஆனது மாநில அரசுகளுக்கு இழப்புகள் நேரும் போது திருப்பி அளிக்கப்படும்.

  

ஜிஎஸ்டி மைகிரேட் மற்றும் புதிதாக இணைந்தவர்கள் எண்ணிக்கை
ஜிஎஸ்டி வரி முறைக்கு 7.2 மில்லியன் வாட் வரி செலுத்துனர்கள் மைகிரேட் செய்துள்ளதாகவும் , மேலும் புதிதாக 1.8 மில்லியன் நபர்கள் சேர்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் 5.9 மில்லியன் நபர்கள் மட்டும் 25 ஆகஸ்ட்-க்குள் வரி தாக்கல் செய்துள்ளனர்.
  

தாதமதாக வரி செலுத்தப்பட்டால்
யாரெல்லாம் 2017 ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்யவில்லையோ அவர்கள் எல்லாம் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் 100 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.
  

மத்திய மாநில ஜிஎஸ்டி பங்கீடு
மாநில ஜிஎஸ்டி மூலம் 43,000 கோடி ரூபாயும், மத்திய ஜிஎஸ்டி மூலம் 48,000 கோடி ரூபாயும் ஜூலை மாதம் பெற வேண்டும் இலக்காக மத்திய அரசு வைத்து இருந்தது.
  

செஸ் மூலம் பெறப்பட்ட வருவாய்
ஜிஎஸ்டி-ன் கீழ் வசூலிக்கப்பட்ட செஸ் வரி மூலம் பெறப்பட்ட 7,198 கோடி ரூபாய் வருவாயில் இருந்து இழப்பீடுகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.
  

மாநில அரசுகள் கேட்ட இழப்பீடு
தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்களது வருவாய் குறைந்துள்ளதாகவும், இதனை ஈடுகட்ட மத்திய அரசு 9,000 கோடி வரை இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
55ஏக்கர் டவுன்ஷிப், வேளச்சேரியில் இருந்து 15நிமிடம் 32 லட்சம் முதல்

தெரிஞ்சுகோங்க.. பிரியாணி விற்பனையில் 200 கோடி பிசினஸ்.. நாகசாமியின் விடா முயற்சி..!

8 வருடங்களுக்கு முன்பு பிரிட்டனில் ஒரு அலுவலகத்தில் வரவேற்பாளராக அதாவது receptionistஆக பணியாற்றி வந்த நாகசாமி தனபாலன் இன்று 200 கோடி ரூபாய் வர்த்தகத்தை செய்து வருகிறார்.
வெறும் 35 வயதாகும் இந்த இளைஞன், தான் பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போது, வெளிநாட்டில் சாதிப்பத்தை விட நமம் ஊரில் நம் மக்கள் முன் சாதிக்க வேண்டும் என வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு தாய் நாட்டுக்கு புறப்பட்டார்.
இப்போது துவங்கியது இந்த 200 கோடி ரூபாய் வர்த்தகத்தின் துவக்கம்.

2009ஆம் ஆண்டு..
பல்வேறு சூழ்நிலைக்கு மத்தியில் நாகசாமியின் தந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது, இதனால் 2009ஆம் பிரிட்டனில் தான் செய்துகொண்டு இருந்த வரவேற்பாளர் வேலையை விட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
  

திண்டுக்கல்
தனது சொந்த ஊரான திண்டுக்கல் வந்த உடன் சில நாட்களில் நாகசாமி தனது தாத்தா நடத்தி வரும் பிரியாணி கடையை நிர்வகிக்க துவங்கினார்.
தற்போது இதன் பெயர் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.

  

40 கடைகள்
இந்த சிறிய பிரியாணி கடையை நிர்வாகம் செய்த சில நாட்களிலேயே நாகசாமி தனபாலன் சென்னைக்கு தனது கிளையை விரிவாக்கம் செய்தார், வெளிநாட்டு அனுபவம், படிப்பு ஆகியவை இவருக்கு பெரிய அளவில் உதவியது.
இதன் காரணமாக இன்று உலகளவில் 40 கிளை கொண்டு இயங்கி வருகிறது திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.


  

1957இல் துவக்கம்..
1957ஆம் ஆண்டல் நாகசாமியின் தாத்தா திண்டுக்கல் பகுதியில் ஆனந்த விலாஸ் என்ற சிறிய ஹோட்டலை நடத்தி வந்தார்.
இப்போது அக்கவுண்டட் ஆக இருந்த நாகசாமியின் மனைவி சமைத்த பிரியாணி தனிப்பட்ட சுவையாக இருந்தது. இந்த சுவை மக்களுக்கு மிகவும் பிடித்துப்போன காரணத்தால், திண்டுக்கல் பகுதியை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து ஆனந்த விலாஸ் கடையை தேடி வந்து சாப்பிட துவங்கினார்கள்.
இதுவே முக்கியமாக கொண்டு அடுத்தகட்ட திட்டத்தில் களமிறங்கினார் நாகசாமி.

  

மக்கள் வரவேற்பு
ஆனந்த விலாஸ் கடையில் பில் கவுன்டரில் எப்போது தலைப்பாகை கட்டிக்கொண்டு ஓருவர் பணத்தை வசூல் செய்வார், பிரியாணியின் சுவை மட்டுமல்லாமல் தலைப்பாகை மனிதரையும் மக்கள் கவனித்தனர்.
இதனால் ஆனந்த விலாஸ் பெயரை மறந்து மக்கள் தலைப்பாகட்டி பிரியாணி என அழைக்க துவங்கினர்.
  

கோயம்புத்தூர்
1957 முதல் 2009ஆம் ஆண்டு வரை தலைப்பாகட்டி பிராயாணி ஆன ஆனந்த விலாஸ் கடை ஒரேயொரு கிளையுடன் திண்டுக்கலில் மட்டும் இருந்து வந்த நிலையில், நாகசாமியின் சோதனை திட்டமாக கோயம்புத்தூரில் 2வது கிளை திறக்கப்பட்டது.
ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை.

  

விரிவாக்கம்
இதன் பின் திண்டுக்கல் பகுதியிலேயே இன்னொரு கடையை திறக்கலாம் என கூறிய நாகசாமி, குடும்பம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
ஆனாலும் விடா முயற்சியுடன் பல தரப்பட்ட திட்டங்களை வகுத்தார் நாகசாமி.

  

சென்னை விரிவாக்கம்
கோயம்புத்தூரில் தோல்வியை கண்ட நாகசாமி, பல குழப்பங்கள், பயத்தை கடந்து உறுதியான முடிவுடன், தனது தந்தைக்கு நம்பிக்கை அளித்து சென்னைக்கு திண்டுக்கல் தலைப்பாகட்டி பிராயாணியை கிளையை விரிவாக்கம் செய்தார்.
  

முதலீடு
துவக்கத்திலேயே சென்னை அண்ணா நகர் பகுதியில் முதல் கிளையை அமைத்தார்.  நாகசாமி, இதற்கான முதலீட்டை தனது தந்தையுடன் சேர்த்து திரட்டினார்.
  

வெற்றியின் ரகசியம்..
கிளை விரிவாக்கம் துவக்கத்தில் இருந்தே நாகசாமி ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார், பணத்தைவிடவும் வாடிக்கையாளர்களை சம்பாதிப்பதே முதல் நோக்கமாக கொண்டு இருந்தார் நாகசாமி.
  

உதவி
சென்னை வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நாகசாமி தமிழ்நாட்டையே கலக்கும் இரண்டு ஹோட்டல் நிறுவன தலைவர்களின் உதவியை நாடினார்.
ஆம், சரவண பவன் மற்றும் அடையார் ஆனந்த பவன் நிறுவனங்களின் மூலம் சென்னை வர்த்தகம் மற்றும் கிளையை விரிவாக்கம் செய்தார் நாகசாமி.

  

குடும்ப வர்த்தகம்
பொதுவாக தொழிற்துறை, தொழில்நுட்பம் மூலம் பல வகையில் வளர்ந்துள்ள மக்கள் மத்தியில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினம் தான். இக்காலக்கட்டத்தில் தந்தை வர்த்தகத்தை மகன் புதிய பாதையில் கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் உள்ளது.
இப்படி அடுத்த தலைமுறையிடம் மாறிய வர்த்தகத்தில் 50 சதவீத வர்த்தகங்கள் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. இதில் நாகசாமி வெற்றி அடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

  

மண் வாசனை
இந்தியாவில் பல வகையான பிரியாணிகள் உண்டு லக்னாவி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி என பல உள்ளது. இவை அனைத்திற்கும் ஒரு தனிப்பட்ட சுவை மற்றும் சிறப்பு உள்ளது.
அதேபோல் தலப்பாகட்டி பிரியாணிக்கும் ஒரு தனிப்பட்ட சுவை இருக்கும், ஆதாவது நமம் ஊர் ருசி வட நாட்டு வாசம் இல்லாமல் தமிழ்நாட்டு சுவையை தொட்டு இருக்கும் தலப்பாகட்டி பிரியாணி. இதுவே மக்களை ஈர்க்க முக்கிய காரணமாக இருக்கிறது.