Sunday, 27 August 2017

பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா பற்றி தெரியுமாங்ஜி..?

பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா திட்டம் நாட்டில் காப்பீட்டு ஊடூருவல் அளவை அதிகரிக்க 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது குறைந்த விலையில் கிடைக்கும் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.

நன்மைகள்

பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா திட்டத்தில் விபத்தினால் ஏற்படும் மரணம், முழுமையான ஊனம், பகுதியாக ஊனம் ஆகிவற்றிற்கு காப்பளிக்கிறது. மரணத்திற்கான சலுகைகள் 2 லட்சம் வரை இந்தக் காப்பீட்டுத் திட்டம் மீட்டெடுக்க முடியாத மற்றும் முழுமையான இரண்டு கைகள், இரண்டு கண்கள் அல்லது பார்வை அல்லது ஒரு கால் அல்லது பாதம் ஆகியவற்றை இழந்தால் காப்பீடளிக்கிறது.

ஒரு வேளை ஒரு கால், ஒரு கை, பாதம், ஒரு கண், அல்லது பார்வை இழந்தால் ரூ. 1 லட்சம் வரை காப்பீடளிக்கிறது.

  தகுதி மற்றும் காப்பீட்டு முனைமம் இந்தக் காப்பீடு 18 முதல் 70 வயது வரையுள்ள மக்களுக்கு கிடைக்கப் பெறுகிறது. இதற்கான காப்பீட்டு முனைமம் வருடத்திற்கு ரூ. 12 மட்டுமே. முனைமத் தொகை நேரடியாக சந்தாதாரர்களின் கணக்கிலிருந்து வங்கிக்கு தானாகப் பற்று வைக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும், தானியங்கியாகப் பற்று வைக்கப்படும் வசதியாக ஒரு ஒப்புதல் கடிதத்தையும் தர வேண்டும்.  

பிஎம்எஸ்பிஒய் க்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா திட்டத்தில் விண்ணப்பிப்பது அல்லது இணைவது எப்படி என்று தெரிந்துக் கொள்ளுங்கள். திட்ட விண்ணப்பம் / சேர்க்கைப் படிவத்தை தரவிரக்கம் செய்து நிரப்புங்கள் பின்வரும் விவரங்களை சரியாக நிரப்புங்கள்: (i) பெயர் (ii) பிறந்த தேதி (iii) உங்கள் வங்கிக் கணக்கு எண் (iv) ஆதார் எண் ஆதார் எண்ணின் நகலையும் இணையுங்கள். இப்போது விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள், வருங்காலத்தில் சரிப்பார்ப்பதற்கு ஒப்புதல் சீட்டை சேமித்து வையுங்கள்.    

இந்தத் திட்டத்தை வழங்குபவர் யார்?

இந்தத் திட்டம் பொதுத் துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. வங்கிகளுடன் இணைந்திருக்கும் நியு இந்தியா ஹஷூரன்ஸ் நிறுவனம், நேஷ்னல் இன்ஷூரன்ஸ், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ் அண்ட் கோ மற்றும் யுனைடட் இந்தியா இன்ஷூரன்ஸ் இந்தியா போன்றவை பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா திட்டத்தை வழங்குகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.