Tuesday, 29 August 2017

‘ஆர்ஜியோ போன்’ முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

ரிலை­யன்ஸ் குழு­மத்­தைச் சேர்ந்த, ஆர்­ஜியோ நிறு­வ­னத்­தின், 4ஜி – பியூச்­சர் போனின் முன்­ப­திவு, தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்டு உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: நிறு­வ­னத்­தின், பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட, 4ஜி – பியூச்­சர் போனுக்கு, லட்­சக்­க­ணக்­கான வாடிக்­கை­யா­ளர்­கள் முன்­ப­திவு செய்­துள்­ள­னர். அள­விற்கு அதி­க­மா­னோர் பதிவு செய்­துள்­ள­தால், ஆர்­ஜியோ போனுக்­கான முன்­ப­திவு, தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்டு உள்­ளது. மீண்­டும், முன்­ப­திவு துவங்­கும் போது, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஆக., 24ல், ஆர்­ஜியோ போனுக்­கான முன்­ப­திவு துவங்­கிய சில மணி நேரத்­தில், 40 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர், ஆர்­ஜியோ வலை­த­ளத்­தில், 500 ரூபாய் செலுத்தி, முன்­ப­திவு செய்­த­னர். ஒரே சம­யத்­தில், லட்­சக்­க­ணக்­கா­னோர் விண்­ணப்­பித்­த­தால், ஓரிரு முறை வலை­த­ளம் முடங்­கி­யது. தற்­போது, தற்­கா­லி­க­மாக, முன்­ப­திவு நிறுத்­தப்­பட்டு உள்­ளது. ஆர்­ஜியோ போன் வினி­யோ­கம், செப்., இரண்­டா­வது வாரத்­தில் துவங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.