Saturday, 26 August 2017

ரூபா புருஷோத்தமன் - இவரைத் தெரியுமா?-

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைமை பொருளாதார நிபுணராக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2006-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை எவர்ஸ்டோன் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

இதே நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுக்கு தலைவராகவும் இருந்தவர்.

இண்டிவிஷன் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். மேலும் இதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

இங்கிலாந்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டமும், லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் கல்லூரியில் அறிவியல் மற்றும் மேம்பாட்டு பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.

சீனா பொருளாதாரம், உலக வர்த்தகம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் அதிக ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டவர்.

கோல்டுமேன்சாக்ஸ் நிறுவனத்தில் சர்வதேச பொருளாதார நிபுணராகவும் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.