ஸ்மார்ட் போன்' குறித்து அதிகம் தெரியாத பெற்றோர்கள் 'புளூவேல்' கேம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த 50 நாள் 'சேலேன்ஜ் கேம்' ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. போனில் 'இன்ஸ்டால்' செய்ததும் விளையாடலாம்.
விளையாடும் நபருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். உதாரணமாக 'உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு.
ரயில்வே டிராக்கில் நில், உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய். அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று. அப்போது தான் நீ விளையாட்டில் வெற்றி பெறுவாய்,' என்றெல்லாம் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும்.
இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொல்லவும் முடியாது, ஏன் என்றால் இந்த 'கேம்'மை இன்ஸ்டால் செய்ததும், உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் உள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போனுக்கு அனுப்பப்படும் என்று மிரட்டல் தகவல் வரும். 'கேம்'மில் டாஸ்க் செல்லும் 'மேப்' நீல திமிங்கலம் வடிவத்தில் இருப்பதால், இதற்கு 'புளூவேல்' என்று பெயர் வைத்துள்ளனர்.
ஸ்மார்ட் போன்களை 'ஹேக்' செய்யக் கூடிய நபர்களால் இந்த கேம் இயக்கப்படுவதால் தான், நம் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு இந்த 'கேம்'மை விளையாடாமல் தவிர்க்க வேண்டும்.
Thursday, 31 August 2017
புளுவேல் கேம் அஎன்ல் எஎன்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.