அஞ்சலகம் புரியும் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., உண்டா? நான், ‘ஸ்பீடு போஸ்ட்’ செய்த போது, என்னிடம் இருந்து, ஜி.எஸ்.டி., வசூல் செய்தனர். இதை விளக்கவும்.– மணிவண்ணன், சென்னைஅடிப்படை அஞ்சல் சேவைகளுக்கு, வரி விதிக்கப்படாது. தபால் துறையினர் புரியும் குறிப்பிட்ட சில சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். உதாரணமாக, ஸ்பீடு போஸ்ட், எக்ஸ்பிரஸ் பார்சல் போன்ற சேவைகளுக்கு வரி விதிக்கப்படும்.
சார், எனக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள, ஏழு கடைகளை, வாடகைக்கு விட்டுள்ளேன். ஜி.எஸ்.டி., பதிவை பெறுவதற்கு, உச்ச வரம்பான, 20 லட்சம் ரூபாயை கணக்கில் கொள்ள வேண்டுமா அல்லது ஒவ்வொரு கடையின் வாடகை தொகை, 20 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டுமா?– ரமணி, துறையூர்இது, தவறான புரிதல். உங்களுடைய ஆண்டு வழங்கலின் மொத்த வருமான தொகை, 20 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டாம். கடை வாரியாக, உச்ச வரம்பை கணக்கில் கொள்ளக் கூடாது. நபரின் மொத்த வழங்கலை பொறுத்தே பதிவானது அமையும்.
சார், பொருளுக்கான சப்ளையில், முன்பணம் வசூலித்தால், அதற்கு, ஜி.எஸ்.டி., உண்டு என, படித்தேன். நாங்கள், ஜி.எஸ்.டி., வருவதற்கு முன்பே, முன்பணம் பெற்று விட்டோம். அதற்கு, ஜூலை மாதம் வரி செலுத்த வேண்டுமா; அவ்வாறு செலுத்தவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படுமா?– ராஜ்கிரண், வேளாங்கண்ணிபொருள் அல்லது சேவையின் வழங்கல்களுக்காக முன்பணம் வசூலித்தால், அதற்கு, ஜி.எஸ்.டி., உண்டு. ஆனால், ஜி.எஸ்.டி., வருவதற்கு முன் பெற்ற முன்பண தொகைக்கு, நீங்கள் வரி செலுத்த தேவையில்லை. பொருளின் வழங்கலின் போது, வரி செலுத்தினால் போதும்.
நாங்கள், கடையில் இருந்து அலுவலக உபயோகத்திற்காக, புத்தகங்கள் வாங்குகிறோம். அதில், விற்பனையாளரின், ஜி.எஸ்.டி., பதிவு எண் உள்ளது. ஆனால், வரி விதிக்கப்படவில்லை. தற்போது, நாங்கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் வரி செலுத்த வேண்டுமா?– விக்னேஷ், கோவைகுறிப்பிட்ட புத்தகங்களுக்கு, வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளனர். விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் போது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் வரி செலுத்த வேண்டாம். ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை என்பது, வரிக்கு உட்பட்ட பொருட்களை அல்லது சேவைகளை, பதிவு செய்யாத நபரிடமிருந்து பெறும் போது செலுத்த வேண்டும்.
எங்களுடைய நிறுவனத்தின் சார்பாக, பயிற்சி கூட்டம் சில நேரங்களில் உணவகத்தில் நடத்துவோம். அவர்கள், இட வசதி தருவர்; உணவிற்கான தொகையை அளித்து விடுவோம். உணவக தொகையில், 18 சதவீதம், ஜி.எஸ்.டி., விதித்துள்ளனர். இவ்வாறு, உணவிற்காக நாங்கள் செலுத்திய, ஜி.எஸ்.டி.,யை, உள்ளீட்டு வரி பயனாக பெற இயலுமா?– விக்னேஸ்வரன், குரோம்பேட்டைநீங்கள் செலுத்திய, ஜி.எஸ்.டி., வணிகத்திற்காக அளித்தது என்றாலும், உணவிற்காக செலுத்திய வரியை, உள்ளீட்டு வரி பயனாக பெற இயலாது.
‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் செலுத்த வேண்டிய தொகையை, ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி தொகையில் இருந்து செலுத்தலாமா?– இப்ராஹிம், காசிமேடுநீங்கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் செலுத்த வேண்டிய தொகையை, பணப் பரிவர்த்தனையால் மட்டுமே செலுத்த வேண்டும். தங்களுடைய, சி.ஜி.எஸ்.டி., – எஸ்.ஜி.எஸ்.டி., – ஐ.ஜி.எஸ்.டி., போன்ற உள்ளீட்டு வரி பயன் கணக்கிலிருந்து செலுத்த முடியாது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.