Monday, 28 August 2017

தீபக் மிஸ்ரா யார் என்று தெரியுமா? தற்பொழுது புதிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் ஜே.எஸ். கெஹரின் பதவிக்காலம் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சட்ட விதிகளின்படி தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி, கேஹரிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தனக்குப் பிறகு மிகவும் மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை சட்ட அமைச்சகத்திடம் கெஹர் சிபாரிசு செய்தார். இன்று சுப்ரீம் கோர்ட்டின் 45–வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

1977–ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார். 1996–ம் ஆண்டு, ஒடிசா ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மத்தியபிரதேசம், பாட்னா, டெல்லி ஐகோர்ட்டுகளில் பணியாற்றிய பிறகு, 2011–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆனார். தலைமை நீதிபதியாக பதவியேற்று உள்ள நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்தப் பதவியை தொடர்ந்து 13 மாதங்கள் வகிப்பார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.