என்பிஎஸ் எனப்படும் தேசீய ஓய்வூதியத் திட்டக் கணக்கை தொடங்க இப்பொழுதெல்லாம் வெறும் 25 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. தேசீய பாதுகாப்பு வைப்புநிதி கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் அங்கீகாரம் பெற்ற 17 வங்கிகளின் வரிசைப் பட்டியலில் உள்ள ஒரு வங்ககியில் உங்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால், மேலும் உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் இணையத்தில் enps.nsdl.com. என்கிற இணையத்தளத்திற்கு சென்று என்பிஎஸ் க்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
என்பிஎஸ் கணக்கை திறக்கும் போது, உங்களுக்கு ஒரு மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள், மற்றும் ஒரு செயல்பாட்டில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு (இணைய வங்கி சேவை வசதியுடன்) ஆகியவை தேவை.மேலும் ஆதார் அல்லது பான் கார்டும் தேவைப்படும்.
என்பிஎஸ் கணக்கைத் தொடங்குவது எப்படி?
ஒரு என்பிஎஸ் கணக்கை தொடங்க கீழே விளக்கப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றுங்கள்:
enps.nsdl.com என்கிற இணைய முகவரிக்குள் சென்று NSDL's eNPS என்கிற இணையதளத்திற்குள் செல்லுங்கள்.
அங்குள்ள பதிவு என்கிற தேர்வை சொடுக்கவும்.
ஒரு புதிய திரை திறக்கும். அங்கு ‘இணைய சந்தாதாரர் பதிவு' என்கிற பக்கத்தில் ‘புதிய பதிவு' என்று தேர்வு செய்யவும்.
சுயவிவரம் விண்ணப்பதாரரின் தகுதி நிலை, வங்கிக் கணக்கு வகை போன்ற உங்கள் சுயவிவரங்களுக்கு பொருத்தமான தேர்வுகளை செய்யுங்கள்.
உங்களிடம் ஆதார் கார்டு இருந்தால் ‘ஆதார்' என்கிற தேர்வை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ‘பான் கார்டு' என்கிற தேர்வையும் தேர்ந்தெடுக்கலாம்.
ஆதார் நீங்கள் ஆதாரைத் தேர்ந்தெடுத்திருந்தால் தொடர்ந்து செயல்பட கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளை பின்பற்றவும்.
‘ஓடிபி ஐ உருவாக்கவும்' என்கிற தேர்வை சொடுக்கவும்.
அனைத்து விவரங்களையும் உள்ளிடுங்கள், ஓடிபி எனப்படும் ஒரு முறை கடவுச் சொல் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும்.
கட்டாய தகவல்கள் ஆதார் தகவல் தளத்தில் உங்கள் சுயவிவரங்களை அமைப்பு தேடும்.
ஆன்லைன் படிவத்தில் உள்ள அனைத்து கட்டாய தகவல்களையும் உள்ளிடவும்.
உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றம் செய்யவும்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நுழைவாயிலை அடைய விவரங்களை சமர்ப்பிக்கவும்.
உங்கள் வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது இணைய வங்கி வசதி மூலம் முதல் பங்களிப்பைச் செலுத்துங்கள்.
ஒருவேளை நீங்கள் பான் கார்டை தேர்ந்தெடுத்திருந்தால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் பான் கார்டை தேர்ந்தெடுத்திருந்தால் பின்வரும் படிநிலைகளை பின்பற்றவும். பட்டியலிலிருந்து நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் வங்கி உங்கள் கேஒய்சி விவரங்களை சரிபார்க்கும். சரிபார்ப்பிற்கு உங்கள் வங்கி உங்கள் கணக்கிலிருந்து ரூ. 125 ஐ ஒரு முறை கட்டணமாக எடுத்துக் கொள்ளும்.
வங்கிப் பதிவுகளுடன் உங்கள் பெயர் மற்றும் முகவரி பொருந்தியிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
இது கேஒய்சி சரிபார்ப்பிற்கு அத்தியாவசியமானதாகும். உங்கள் புகைப்படத்தையும் கையொப்பத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்துங்கள் வெற்றிகரமாகப் பணம் செலுத்திய பிறகு உங்கள் பிரான் (PRAN) உருவாக்கப்படும்.
தேசீய ஓய்வூதியத் திட்டம் தேசீய ஓய்வூதியத் திட்டம் குடிமக்களுக்கு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நிதி சார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் வரிச் சலுகைகளும் உள்ளன.
இந்தத் திட்டம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு வழக்கமான வருமான ஆதாரமாகச் செயல்படும். என்பிஎஸ் இன் கட்டணமற்ற எண் என்பிஎஸ் கணக்கை தொடங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் நீங்கள் என்பிஎஸ் உதவி இணைப்பு எண்ணான 1800110708 என்கிற எண்ணை அழைக்கலாம். இந்த எண் ஏற்கனவே திட்டத்தில் இணைந்திருக்கும் சந்தாதாரர்கள் மற்றும் இணையவிருக்கும் மறைமுக சந்தாரர்களின் கேள்விகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கட்டணமற்ற எண் ஆகும்.
Vetrikodikattucommerce
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.