Wednesday, 30 August 2017

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த முதல் மாதத்தில் மட்டும் 92,283 கோடி வருவாய்.. சொல்கின்றார் அருண் ஜேட்லி!

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது, தற்போது அது நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், எதிர்பார்த்ததை விடக் கூடுதல் வருவாய் முதல் மாதத்தில் கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிச் செலுத்துவோரில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் வருமானத்தைச் சமர்ப்பிக்கவும், தங்கள் வரிக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தவும் இல்லை.

அருண் ஜேட்லி அறிவிப்பு
ஜூலை மாதம் மட்டும் 92,283 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும், 3 கோடியே 9 லட்சம் நபர்கள் வரி தாக்கல் செய்துள்ளதாகவும், மத்திய அரசு 91,000 கோடி ரூபாய் வரையில் மட்டுமே வருவாய் எதிர்பார்த்ததாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.
  

கட்டுப்பாட்டில் உள்ள வருவாய்
ஜிஎஸ்டிக்கு மாறுவது வருவாய் இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அது அச்சத்தைத் தூண்டுவது மட்டுமல்லாமல், இது சீர்திருத்த முன்முயற்சியை ஆதரித்த யூனியன் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கான கைக்குள்ளேயே உள்ளது என்றும் கூறியுள்ளார்.

  

வரி எப்படி மாநிலங்களுக்கு மத்திய அரசுக்குப் பிரிக்கப்படுகின்றது
ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் வரி மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி என்று மூன்று விதமாக உள்ளது. பொதுவாக ஜிஎஸ்டி வரி முறியின் கீழ் ஒரு மாநிலத்திற்கு உள்ளேயே விற்கப்படும் போது மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டி இரண்டும் சமப்பங்காகப் பிறக்கப்பட்டு அளிக்கப்படும். இது ஐஜிஎஸ்டி எனப்படும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-ல் கடைசியில் அந்தப் பொருட்கள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றதோ அந்த மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கு பிரித்து அளிக்கப்படும்.
  

செஸ் வரி எப்படி வசூலிக்கப்படுகின்றது
ஆடம்பர பொருட்கள் மற்றும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பொருட்கள் மீது 28 சதவீத வரி மட்டும் இல்லாமல் செஸ் வரி கூடுதலாக விதிக்கப்படும். இந்தச் செஸ் ஆனது மாநில அரசுகளுக்கு இழப்புகள் நேரும் போது திருப்பி அளிக்கப்படும்.

  

ஜிஎஸ்டி மைகிரேட் மற்றும் புதிதாக இணைந்தவர்கள் எண்ணிக்கை
ஜிஎஸ்டி வரி முறைக்கு 7.2 மில்லியன் வாட் வரி செலுத்துனர்கள் மைகிரேட் செய்துள்ளதாகவும் , மேலும் புதிதாக 1.8 மில்லியன் நபர்கள் சேர்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் 5.9 மில்லியன் நபர்கள் மட்டும் 25 ஆகஸ்ட்-க்குள் வரி தாக்கல் செய்துள்ளனர்.
  

தாதமதாக வரி செலுத்தப்பட்டால்
யாரெல்லாம் 2017 ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்யவில்லையோ அவர்கள் எல்லாம் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் 100 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.
  

மத்திய மாநில ஜிஎஸ்டி பங்கீடு
மாநில ஜிஎஸ்டி மூலம் 43,000 கோடி ரூபாயும், மத்திய ஜிஎஸ்டி மூலம் 48,000 கோடி ரூபாயும் ஜூலை மாதம் பெற வேண்டும் இலக்காக மத்திய அரசு வைத்து இருந்தது.
  

செஸ் மூலம் பெறப்பட்ட வருவாய்
ஜிஎஸ்டி-ன் கீழ் வசூலிக்கப்பட்ட செஸ் வரி மூலம் பெறப்பட்ட 7,198 கோடி ரூபாய் வருவாயில் இருந்து இழப்பீடுகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.
  

மாநில அரசுகள் கேட்ட இழப்பீடு
தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்களது வருவாய் குறைந்துள்ளதாகவும், இதனை ஈடுகட்ட மத்திய அரசு 9,000 கோடி வரை இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
55ஏக்கர் டவுன்ஷிப், வேளச்சேரியில் இருந்து 15நிமிடம் 32 லட்சம் முதல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.