Wednesday, 30 August 2017

ட்ரூகாலர் பே என்பது என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன?

ஐசிஐசிஐ வங்கியும், ட்ரூகாலர் நிறுவனமும் இணைந்து ட்ரூகாலர் பே-ஐ அறிமுகப்படுத்தியது. ட்ரூகாலர் பே-ஐ கொண்டு நீங்கள் எந்த ஒரு யுபிஐ (ஒருங்கிணைக்கப்பட்ட பணம் செலுத்தும் இடைமுகப்பு) செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து உடனடியாகப் பணத்தை அனுப்பலாம் அல்லது பெறலாம். 

இதில் தேவைப்படும் ஒரே விஷயம் வங்கிக் கணக்கு யுபிஐ யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 'ட்ரூகாலர் பே' யின் அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் ஐசிஐசிஐ வங்கி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் பயனாளர்கள் இதில் ப்ரீபெய்டு மற்றும் ஃபோஸ்ட்பெய்டு ரீசார்ஜுகளையும் செய்துக் கொள்ளலாம். 

தொடங்குவது எப்படி? இந்த பணம் செலுத்தும் செயலியை அணுகுவதற்கு உங்களுக்கு ஒரு ஸ்மார்ட் ஃபோனும் இண்டர்நெட் இணைப்பும் மற்றம் ஒரு மொபைல் எண்ணும் தேவை. உங்கள் வங்கிக் கணக்கில் யுபிஐ-ஐ செயல்படுத்த மேலும் உங்களுக்கு இந்திய வங்கி ஏதேனும் ஒன்றில் வங்கிக் கணக்குத் தேவை. அந்த வங்கிக் கணக்கிலும் யுபிஐ செயல்பட்டிருக்க வேண்டும். 

மேலும் நீங்கள் ட்ரூகாலர் பேமெண்டில் பதிவு செய்யப் பயன்படுத்திய அதே மொபைல் எண்ணை இந்த வங்கியிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.   யுபிஐ ஆதரவு பெற்றது யுபிஐ இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கின் வழியாக நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அவர்/அவள் வங்கிக் கணக்கு யுபிஐ இணைக்கப்பட்ட செயலியுடன் (ட்ரூ காலரையும் சேர்த்து) இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவருடைய யுபிஐ அடையாள எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் பணம் அனுப்பலாம். பணப் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் ட்ரூகாலர் பே-யில் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு ஒரு பரிவரர்த்தனைக்கு ரூ. 1 இலட்சம் ஆகும். பயனாளர் 24 மணி நேரத்திற்குள் ரூ. 1 இலட்சத்திற்கும் அதிகமானப் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது.

 மேலும் ட்ரூகாலர் பே, ஒரு பயனாளர் 24 தணி நேரத்திற்குள் 20 பணப் பரிவர்த்தனைக்கு மேல் அனுமதிக்காது.   ரீசார்ஜ் வரம்பு மேலும், ட்ரூகாலர் பே யில் ரீசார்ஜுகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. மொபைல் ரீசார்ஜுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 1,500 ஆகும். 24 மணி நேரத்திற்குள் மொபைல் ரீசார்ஜுகளுக்கான ஒட்டுமொத்தக் கட்டுப்பாடு
 வசதிகள் ட்ரூகாலர் பே-ஐ பயன்படுத்தி நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்: 

யுபிஐ அடையாள எண்ணை உருவாக்கலாம். ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு (பி2பி) யுபிஐ வழியாகப் பணம் செலுத்தலாம். ப்ரீ பெய்டு மொபைல் ரீசார்ஜுகள் மற்றும் போஸ்ட் பெய்டு மொபைல் கட்டணங்களைச் செலுத்தலாம். பணப் பரிவர்த்தனை வரலாறுகளை அணுகலாம். உங்கள் வங்கிக் கணக்கின் நிலுவைத் தொகைகளை சரிபார்க்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.