Tuesday, 29 August 2017

பேமென்ட் வேலெட், நெட் பாங்கிங்.. எந்த பணப் பரிமாற்ற முறை சிறந்தது..?

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையினை அடுத்து ரொக்க பணம் பற்றாக்குறை ஏற்பட்டது, இதனைக் குறைக்க தேசிய அளவில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையினை முன்னெடுத்து வர முயன்றதால் சற்றுக் கட்டுப்படுத்தப்பட்டது.
அறிக்கையாக வெளியான தரவின் அடிப்படையில் ஆண்டுக்கு 12,000 கோடி வரை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வேலெட்
பேமென்ட் வேலெட், நெட் பாங்கிங் ஆகிய இரண்டு பணப் பரிவர்த்தனை முறைகளில் டிஜிட்டல் வேலெட் (பேமென்ட் வேலெட்) என்பது அன்மையில் வந்தது ஆகும். வேலெட் சேவையினைப் பல நிறுவனங்கள் அளித்து வரும் நிலையில் வணிகர்களுக்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தாமல் சிறு தொகையைப் பாக்கெட்களில் வைக்காமல் வேலெட்டில் வைத்துக்கொண்டு எளிதாகச் செலுத்தலாம்.
  

பல வாய்ப்புகள்
சந்தையில் பேமென்ட் வேலெட் சேவை அளிக்கப் பல நிறுவனங்கள் உள்ளதால் உங்களது விருப்பத்தின் படி ஏதேனும் ஒரு வேலெட் சேவை வழங்கும் நிறுவனம் அல்லது வங்கியுடன் இணைந்து தேவையான அடிப்படை விவரங்களை அளித்துப் பல விதமான வேலெட் சேவைகளைத் துவங்கலாம்.
  

இணைய வங்கி சேவை
மேலும் வேலெட் சேவை இணையதளம் மற்றும் இணையதள வங்கி சேவை மூலமாகப் பாதுகாப்பாகப் பணப் பரிவர்த்தனை சேவையினை வழங்குகின்றது. மேலும் ஆர்பிஐ வங்கி ஒரு மாதத்திற்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று வரம்பு வைத்துள்ளது.
  

பாதுகாப்பு
இணையதள வங்கி சேவைகளைப் பயன்படுத்த லாகின் ஐடி மற்றும் கடவுச் சொல் தேவை, மேலும் பரிவர்த்தனை கடவுச்சொல்லும் தேவைப்படுகின்றது. இந்தக் கடவுச்சொல் இரண்டும் பாதுகாப்பாகக் குறியிடப்பட்டவை ஆகும்.
மேலும் பரிவர்த்தனை வெரிசைனின் மூலம் சரிபார்க்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டவை ஆகும். ஆனால் வேலெட் சேவைகள் பரிவர்த்தனை திருடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
  

வித்தியாசம்
என்னதான் இருந்தாலும் இந்த இரண்டு விதமான பரிவர்த்தனை முறைகளிலும் ரிஸ்க் என்பது உண்டு, இணைய வங்கி சேவை என்பது வங்கிகள் மட்டுமே அளிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் இதன் மீது கூடுதல் நம்பிக்கை இருக்கிறகு.
ஆனால் வேலெட் சேவை மூலம் பணத்தைச் செலுத்தும் போது பல இடங்களில் பல சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே இதனை இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

  

முடிவு
பெரிய தொகை பரிமாற்றத்திற்கு இணைய வங்கி சேவையும், சிறிய அளவிலான தொகை பரிமாற்றத்திற்கு வேலெட் சேவையைப் பயன்படுத்தலாம்.
சராசரியாக ஒரு மாதத்தில் பெரிய தொகை பரிமாற்றம் சில முறை மட்டுமே செய்கிறோம். ஆனால் சிறிய முறை பரிமாற்றங்கள் தினமும் செய்கிறோம். இதில் உங்களுக்குக் கூடுதல் சலுகை கிடைத்தால் நன்மை தான்.

சென்னையில் குடியேற தயாராக உள்ள உலக தரம் வாய்ந்த 3 BHK வீடுகள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.