Saturday, 26 August 2017

200 நாடுகளுக்கு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பிளிப்கார்ட்..!

நாட்டின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனமான பிளிப்கார்ட், தனது வர்த்தகத்தைச் சுமார் 200 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து அமேசான் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனம் 500 மில்லியன் டாலர் தொகைக்கு ஈபே நிறுவனத்தை வங்கியது, இந்நிறுவனத்தின் பயன்படுத்தி இதன் வாயிலாகத் தனது நிறுவன விற்பனையாளர்களின் பொருட்களைச் சுமார் 200 நாடுகளில் விற்பனை செய்யும் வகையில் புதிய மாற்றத்தை பிளிப்கார்ட் நிறுவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூட்டணி
பிளிப்கார்ட், ஈபே இந்தியா நிறுவனத்தின் முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் விற்பனையாளர்களுக்குக் குளோபல் பிரோகிராம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருக்கும் விற்பனையாளர்கள், தங்களது பொருட்களை ஈபே மூலம் உலகம் முழுவதிலும் விற்பனை செய்ய அனுமதிக்கிறது.

  

என்ஆர்ஐ
இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்வதைக் காட்டிலும் என்ஆர்ஐகளைக் கவரும் இதன் மூலம் இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியை அடையும்.

  

முக்கியப் பொருட்கள்
இப்புதிய திட்டத்தின் முதல் கட்டமாகப் பிளிப்கார்ட் புடவை, நகைகள், கைவினை பொருட்கள், இதர பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
  

தங்கம்
இதனுடன் பிளிப்கார்ட் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தைப் போலவே தங்கத்தை இணையதளத்தில் விற்பனை செய்யும் திட்டத்தையும் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

  

வர்த்தகம்
இந்திய விற்பனையாளர்களை உலகச் சந்தைக்குக் கொண்டுபோவதன் மூலம் பிளிப்கார்ட் அடுத்தச் சில மாதங்களில் மிகப்பெரிய வர்த்தக வளர்ச்சியை அடைய உள்ளது. இது உண்மையிலேயே அமேசான் நிறுவனத்தைப் பாதிக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.