மத்திய அரசு புதன்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த பதில் ஒன்றில் பொது விநியோக திட்டங்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்பதைச் செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து டிசம்பர் 31-ம் தேதியாக நீட்டித்துள்ளது. இதே போன்று ஆதார் - பான் இணைப்பும் ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இணைப்பில் சிக்கல்
ஆதார் - பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்னும் போது பலரின் பெயர்கள் இரண்டு கார்டுகளில் வெவ்வேறு விதமாக இருப்பதினால் தரவு ஒன்றாக இல்லை என்று இணைப்பு நிராகரிக்கப்படுகின்றது. வழக்கு ஒத்திவைப்பு உச்ச நீதி மன்றம் ஆதார் குறித்த வழக்கை வருகின்ற நவம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. கருப்புப் பணம் மத்திய அரசு பான், ஆதார் இணைப்பைச் செய்வதன் மூலம் கருப்புப் பணத்தினைப் பெறும் அளவில் குறைக்க முடியும் என்று நம்புகின்றது.
வருமான வரி தாக்கல்
அதுமட்டும் இல்லாமல் ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அதார் - பான் இணைப்புக் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட்டிக்க வாய்ப்பு
பொது நலத் திட்டங்களுக்கு ஆதார் கார்டு இணைப்பை நீட்டித்து உள்ளது போன்று பான் - ஆதார் இணைப்பிற்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 31 அல்லது செப்டம்பர் 1- தேதி வெளியிடப்படலாம்.
Vetrikodikattucommerce
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.