ஏ.எம் நாயக், எல் அண்ட் டி என்ற மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியத்தை 17 வருடமாக காட்டிகாத்த முக்கிய தலைவர். 52 வருடங்களாக எல் அண்ட் நிறுவனத்தில் பணியாற்றிய நாயக் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி நிர்வாக தலைவர் என்ற முக்கிய பணியில் இருந்து வெளியேறுகிறார்.
இந்நிலையில் இந்நிறுவனம் இவருக்கான ஒய்வூதிய கணக்கை தனது வருடாந்திர அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
52 வருட பணி
எல் அண்ட் டி நிறுவனத்தில் கடந்த 17 வருடங்களாக தலைவராக பணியாற்றியுள்ள நாயக், இதே நிறுவனத்தில் சுமார் 52 வருடங்கள் பணியாற்றி இந்தியாவில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளார்.
செப்டம்பர் 30
செப்டம்பர் 30ஆம் தேதி நிர்வாக பணியில் இருந்து வெளியேறும் நாயக், அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்நிறுவனத்தின் non-executive chairmanஆக அடுத்த 3 வருடம் பணியாற்ற உள்ளார்.
இதன் மூலம் பணியில் இருந்து முழுமையாக ராஜினாமா பெற்ற நாயக் அவர்களுக்கு 38.04 கோடி ரூபாயை எல் அண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
லீவ் என்கேஷ்மென்ட்
52 வருட பணியில் இவருக்கு கிடைத்த 38.04 கோடி ரூபாயில், லீவ் எண்கேஷ்மென்ட் மூலமாக மட்டுமே 32.31 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
சம்பளம்
2016-17 நிதியாண்டில் மட்டும் ஏ.எம் நாயக் சுமார் 3.36 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.