செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்துக்கு பின், வங்கிகளில், 99 சதவீத, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளன.ரிசர்வ் வங்கி, 2016 - 17 நிதியாண்டுக்கான, ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்விபரம்: நாடு முழுவதும், 632.6 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகள்புழக்கத்தில் இருந்தன. கடந்தாண்டு நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டபோது, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 1,000 ரூபாய் நோட்டுகளில், 8.9 கோடி நோட்டுகள் மட்டுமே, வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்படவில்லை; இது, மொத்த நோட்டுகளில், 1.4 சதவீதம். மீதமுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள், வங்கிகளில், 'டிபாசிட்' ஆகியுள்ளன.
இந்தாண்டு, மார்ச், 31 வரை, 588.2 கோடி, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. முந்தைய ஆண்டில், இது, 1,570 கோடி நோட்டுகளாக இருந்தது. 2016 - 17ல், ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கான செலவு, 7,965 கோடி ரூபாய். முந்தைய நிதியாண்டில், இந்த செலவு, 3,421 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, செல்லாத, 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை பற்றி, ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.
Vetrikodikattucommerce

No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.