Tuesday, 29 August 2017

ஆதார் அட்டையை பூட்டுவது எப்படி?

ஓடிபி 
உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பூட்டி விடலாம். பூட்டுவதைத் தொடங்குவதற்கு முன் உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருக்கிறதா என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள். இந்த செயல்முறையின் போது யுஐடிஏஐ உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல்லை (ஓடிபி) அனுப்பும்.   

படிநிலை 1 
யுடிஏஐ ஆதார் பயோமெட்ரிக் பூட்டுதல் இணைய இணைப்பிற்கு செல்லவும். https://resident.uidai.gov.in/biometric-lock உங்கள் தனித்தன்மையான 12 இலக்க ஆதார் எண்ணையும் அதற்கு அடுத்ததாகக் கிடைக்கப்பெறும் குறியீட்டையும் உள்ளிடவும்,   

படிநிலை 2

 ‘ஓடிபி ஐ அனுப்பவும்' என்கிற தேர்வின் மீது சொடுக்கவும். யுடிஏஐ உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி ஐ அனுப்பும். இந்த ஓடிபி 30 நிமிடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கப்பட்ட இடத்தில் இந்த ஓடிபி ஐ உள்ளிட்டு ‘உள் நுழை' என்கிற தேர்வினை சொடுக்க வேண்டும்.   ஆதார் கார்டை தொலைத்து விட்டீர்களா? பீதியடைய வேண்டாம்: ஆன்லைனில் டூப்ளிகேட் ஆதார் பெற எளிய வழி..! சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 16 ரூபாய் குறைந்தது..! இன்போசிஸ் நிறுவனத்தில் இனி விஷால் சிக்கா செய்யப்போவது இதுதான்..! Featured Posts 

படிநிலை 3 
‘இயலச் செய்' என்கிற தேர்வினை சொடுக்கி, ஆதார் பயோமெட்ரிக்கை பூட்டுவதற்கு அதற்கு பக்கத்தில் கிடைக்கப்பெறும் குறியீட்டை உள்ளிட வேண்டும். பின்னர், ஆதார் பயோமெட்ரிக் வெற்றிகரமாகப் பூட்டப்பட்டதற்கான குறுஞ்செய்தி உங்களை வந்தடையும். பூட்டைத் திறக்கும் காலம் ஒருமுறை நீங்கள் பூட்டிவிட்டால் பின்னர், 10 நிமிடங்களுக்கு மட்டுமே பூட்டைத் திறக்க முடியும். இந்தத் தற்காலிகப் பூட்டைத் திறக்கும் காலத்திற்கு பிறகு, யுடிஏஐ 10 நிமிடங்களில் தானாகவே உங்கள் ஆதாரைப் பூட்டிவிடும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.