2017 முதல் 2022-ம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி ஒரு இயக்கத்தை தொடங்கி வைத்தார். 'சங்கல்ப் சே சித்தீ' எனும் பெயரிலான அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
பிரதமர் நரேந்தர மோடி 'சங்கல்ப் சே சித்தீ' (உறுதியாக இருந்தால் வெற்றி) எனும் பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இதில், அடைய முயலும் 'புதிய இந்தியா'விற்கான இலச்சினை (Logo) வடிவமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன் நிகழ்ச்சிகள் அனைத்திலும், புதிய இந்தியாவின் பெயரில் ஒரு இலச்சினை வடிவமைத்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலச்சினை வரும் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் வடிவமைத்து அனுப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரத்தை www.mygov.in எனும் மத்திய அரசின் இணையதளத்தில் காணலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.