Wednesday 21 February 2018

+2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கு இலவச டிவிடி மெட்டிரியல்- அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர் கரூர் கார்த்திகேயன்




+2 கணக்குப்பதிவியல் பாடப்பொருளை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் டிவிடி வடிவில் தயாரித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன் என்பவர்  வெளியிட்டுள்ளார்.இது ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 வணிகவியல் பாட ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கணக்குப்பதிவியல் பாடத்திற்கானவெற்றிகொடிகட்டு +2 கணக்குப்பதிவியல் பாட வீடியோ மெட்டிரியல்’ (டிவிடி)வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ மெட்டிரியலை தயாரித்து வழங்கிவரும் கரூர் மாவட்டம் ஈசநத்தம் அரசுமேல்நிலைப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன் இது குறித்து நம்மிடையே பேசுகையில்..,
"கடந்த ஐந்து ஆண்டுகளாக  வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களில் 100% தேர்ச்சியும், பல மாணவர்களை 200க்கு 200 மதிப்பெண்கள் பெறவைத்தும் வருகிறேன்.முன்பு கோடைபண்பலை வானொலியில் அறிவிப்பாளராகவும், தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவத்தோடு புதிய தொழில்நுட்பங்களோடு  புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு பாடங்களை நடத்திவருகிறேன்.

எனது மாணவர்களுக்கு  வணிகவியல் பாடம் தொடர்பாக எனது குரலில் பேசி நானே தயாரித்த வீடியோக்கள் மூலமாக பாடங்களை நடத்தி வந்தேன். தேர்ச்சி விழுக்காட்டிலும் நல்ல முன்னேற்றம் கண்டேன்.அதை  ஒரே டிவிடி தொகுப்பாக்கி அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பாடப்பொருளை உள்ளடக்கிய இந்த டிவிடியை சேவை நோக்கோடு  வழங்கி வருகிறேன்.


பாடப்பொருளை படமாக பார்ப்பதால்  படிப்பதில் மாணவர்களின் ஆர்வம் கூடும் என்பதோடு பாடத்தையும்  அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பது எனது பள்ளி மாணவர்கள் மூலம் கிடைத்த அனுபவம்.

கடந்த ஆண்டு +2 வணிகவியல் பாடத்திற்கு வீடியோ மெட்டிரியல் தயாரித்து அதை அனைத்து அரசு மற்றும் பார்வையற்றோர் பயிலும் பள்ளிகளுக்கும் வழங்கினேன். மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சொன்னார்கள். இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், அதிக தேர்ச்சி விழுக்காடும் அடைந்துள்ளதாக ஆசிரிய பெருமக்கள் தெரிவித்துள்ளனர்.குற்ப்பாக பார்வைதிறனற்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியிலும் இந்த வீடியோ மெட்டிரியல் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல இந்த ஆண்டும் +2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கும் வீடியோ மெட்டிரியல் தயாரித்து வெளியிட்டுள்ளேன். அனைத்து அரசுபள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த டிவிடியை எனது சொந்த செலவில் தயாரித்து வழங்கிவருகிறேன். மேலும் இதில் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்து முனைவர்.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் பிரத்யேகமான வீடியோ உரையையும் இணைத்து வெளியிட்டுள்ளேன்.இந்த டிவிடி தேவைப்படுவோர் 9943149788 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் அல்லது karthikeyancommerce என்கிற  Youtube சேனலை Subscribe செய்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.”என்றார்.





Monday 19 February 2018

2017 - 2018 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

🙏👋INCOME TAX 🚔👨‍✈

*2017 - 2018 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...*

✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)

✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍மாற்றுத்திறன்   ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.


✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%

✍Taxable income 3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.

சி.முத்து,
கருவூல தலைமை காவலர்.

தகவல்: சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம், மதுரையில் இருந்து பெற்றது.

Tuesday 6 February 2018

+2 கணக்குப்பதிவியல்,வணிகவியல் பாட வழிகாட்டி: கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்து வகை மாணவர்களையும் 100 % தேர்ச்சியும், 200க்கு 200 மதிப்பெண்களையும் பெற வைத்துவரும் வழிகாட்டி:அனைத்து வகை மாணவர்களுக்கும் பயன்படுத்தலாம்



+2 கணக்குப்பதிவியல்,வணிகவியல் பாட வழிகாட்டி: கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்து வகை மாணவர்களையும் 100 % தேர்ச்சியும், 200க்கு 200 மதிப்பெண்களையும் பெற வைத்துவரும் வழிகாட்டி:அனைத்து வகை மாணவர்களுக்கும் பயன்படுத்தலாம்

For ACCOUNTANCY material click here


For COMMERCE material click Here

( For Technical help call : 99431 49788, 9715240364)




தயாரிப்பு:
சு.லோகநாதன்,
வணிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
அரசுநிலைப்பாளையம்,
திருச்சி மாவட்டம்.

ப.கார்த்திகேயன்,
வணிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்
கரூர் மாவட்டம்.



Vetrikodikattucommerce