Thursday 4 January 2018

தபால் வங்கி: 650 கிளைகள் திறப்பு!

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் (தபால் நிலைய வங்கி) 650 கிளைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள அறிக்கையில், "2017ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி முதற்கட்டமாக சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி ஆகிய இரண்டு இடங்களில் திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி நாடு முழுவதும் மொத்தமாக 650 பேமெண்ட் வங்கிகள் திறக்கப்படவுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த பேமெண்ட் வங்கி பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முன்மொழியப்படும். இந்த வங்கிகள் இந்த ஆண்டு ஏப்ரலுக்குள் செயல்படத் துவங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

வரும், 2018 மார்ச்­ மாதத்திற்குள் ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும், இந்­திய போஸ்ட் பேமெண்ட் வங்­கி­யின் சேவை கிடைக்­கும். நிதியாண்டு இறு­திக்­குள், நாட்­டிலுள்ள 1.55 லட்­சம் தபால் நிலை­யங்­க­ளி­லும், வங்கிச் சேவையை வாடிக்­கை­யா­ளர்­கள் பெற­லாம் என்று இந்­தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் தலைமைச் செயல் அதி­காரியான ஏ.பி.சிங் செப்டம்பர் மாதம் ஐ.நா கருத்தரங்கில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது

Tuesday 2 January 2018

Advertisement created by my students|மாணவர்கள் தயாரித்த வானொலி விளம்பரம்...

Advertisement created by my students|மாணவர்கள் தயாரித்த வானொலி விளம்பரம் - 2

 2015-2016 ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு விளம்பரம் எனும் பாடம் நடத்திய போது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தரப்பட்ட Project workல் சிறந்த படைப்பு என பரிசு பெற்ற வானொலி விளம்பரம்.
பி.கு:  இந்த விளம்பரம்   முழுக்க முழுக்க என் மாணவர்களே தயாரித்தது. Vetrikodikattucommerce

Advertisement created by my students|மாணவர்கள் தயாரித்த வானொலி விளம்பரம்...

 Advertisement created by my students|மாணவர்கள் தயாரித்த வானொலி விளம்பரம் - 1

 2015-2016 ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு விளம்பரம் எனும் பாடம் நடத்திய போது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தரப்பட்ட Project workல் சிறந்த படைப்பு என பரிசு பெற்ற வானொலி விளம்பரம்.
பி.கு:  இந்த விளம்பரம்   முழுக்க முழுக்க என் மாணவர்களே தயாரித்தது.