Tuesday 30 October 2018

வணிக நிறுவனப் பெயர் வந்தது எப்படி.? பகுதி 1

Photo copierக்கு  முதல் முதலாக அதை தயாரித்த நிறுவனம் பெயரிலிருந்துதான் Xerox என பெயர் வந்தது.

முதன்முதலாக அதை தயாரித்த கம்பெனியின் பெயரில் இருந்தது Dalda என பெயர் வந்தது.

தன் சொந்தப் பெயரை ஒட்டி இருந்ததால் மில்டன் என்ற அமெரிக்க வழக்கறிஞரின் பால்பாயிண்ட் கம்பெனி பெயரான Reynold  ரெனால்ட் என்பதை தன் கம்பெனிக்கு வாங்கினார் Edmond Regnault

Renolds கம்பெனியின் தற்போதைய பெயர் Rorito

ஒலி என்று பொருள்படும் Sonic என்ற லத்தீன் சொல்லிலிருந்து வைக்கப்பட்ட பெயர் தான் Sony.

Excellent Oxide என்பதன் சுருக்கப் பெயர் Exide

கம்பெனி முதலாளியின் பெயரான Nirupama என்பதிலிருந்து தான் Nirma என்ற பெயர் வந்தது.

இன்று இந்தியாவில் மட்டும் தான் உலக சிக்கன தினம் கொண்டாடப்படுதுனு சொன்னா நம்புவீர்களா.?

இன்று உலக சிக்கன தினம்

இன்று இந்தியாவில் மட்டும் தான் இந்த உலக சிக்கன தினம் கொண்டாடப்படுதுனு சொன்னா நம்புவீர்களா.?

இன்றைக்கு உலக சிக்கன தினம் இந்தியாவுல மட்டும் தான் கடைபிடிக்கப்படுகிறது. ஆச்சரியமா இருக்குல்ல. இது தொடர்பான கூடுதல் செய்திகளை தெரிஞ்சுக்கலாம் வாங்க..

1924 இத்தாலியில் இருக்கக்கூடிய மிலான் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சிக்கன தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக சேமிப்பு சிக்கன நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் நினைவு தினம் 1984 முதல் அனுசரிக்கப்படுவதால் ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 30ஆம் தேதியன்று உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகள் எல்லாமே 31ம் தேதியும் இந்தியாவில் மட்டும் அக்டோபர் 30ஆம் தேதியும் உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நம்முடைய குழந்தைகளுக்கு  பணத்தின் அருமையை பற்றி சொல்லி அவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் இதுவே இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய தலையாய கடமை.!
- ப.கார்த்திகேயன்,
முதுகலை ஆசிரியர்(வணிகவியல்), அரசு மேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,கரூர் மாவட்டம்.

உலக சேமிப்பு சிக்கன தினம்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' இவ்வுலகில் வாழ பணம் மிகவும் முக்கியமானது. என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ம் திகதி உலக சிக்கன தினம் ( ( World Thrift Day) கொண்டாடப்படுகின்றது.

1924ல் இத்தாலியில் மிலான் நகரில் உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மகாநாட்டில் 'உலக சிக்கன தினம்' என ஒரு தினமாக கொண்டாப்பட வேண்டும் என உறுதிசெய்யப்பட்டது. இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக வாழ்க்கையில் சிக்கனம் மிக முக்கியமான ஒன்றாகும் என்ற கருப்பொருளில் ஒவ்வொருவருடமும் சிக்கனதினம் அக்டோபர் 31 ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றுது.

'ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை' அதாவது வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை என்பது இதன் பொருளாகும்.. வருவாய்க்கு தக்க செலவு செய்பவனுக்கு தீங்கு கவலைகள் இல்லை. இதிலிருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

Friday 26 October 2018

வளர்ச்சிப்பாதையில் கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா  வங்கி நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக 84 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது . இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி நிகர லாபத்தை விட 10.69 சதவீதம் அதிகம்.

Thursday 25 October 2018

வணிகவியல் மன்றம் தொடக்கவிழா மற்றும் 2ம் ஆண்டு வணிகவியல் கண்காட்சி

நேற்று 24.10.2018 கரூர் மாவட்டம் ஈசநத்தம் அரசுமேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் மன்றம் தொடக்க விழா மற்றும் 2ம் ஆண்டு வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது. 

பள்ளி தலைமை ஆசிரியர் பி.மருதைவீரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், கரூரின் மூத்த வணிகவியல் ஆசிரியருமான எம்.கந்தசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் “ வணிகவியல் பாடத்திற்கான வேலைவாய்ப்புகள் நிறையக் கொட்டிக்கிடக்கின்றன. முழு ஆர்வத்துடன் திட்டமிட்டு படித்தால் அனைவருமே வேலைவாய்ப்பை பெறலாம்” என்றார்.

மேலும் வணிகவியல் பிரிவு மாணவர்கள் படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமைகள் குறித்தும், பொதுத்தேர்விற்கு தயாராக வேண்டிய விதங்கள் குறித்தும் வணிகவியல் ஆசிரியர்கள் மகேந்திரன், அபுதாகீர், இப்பள்ளி ஆசிரியைகள் தெய்வானை, சுசீலா ஆகியோர் விளக்கினர்.

முன்னதாக இப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ப.கார்த்திகேயன் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கிப்பேசுகையில் “ பாடப்புத்தகங்களைத் தாண்டிய அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள உதவுவதோடு, செய்முறைப் பயிற்சியில்லாத வணிகவியல் பிரிவு மாணவர்களின் படைப்பாற்றலை ஆக்கப்பூர்வமான முறையில் வெளிக்கொண்டு வர இந்த வணிகவியல் மன்றம் உதவும். இதுபோன்று மன்றங்களை மேல்நிலை வகுப்புகளில் நடத்த ஊக்குவித்து வரும் பள்ளிக்கல்வித்துறைக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன் “ என்றார்.

முன்னதாக இப்பள்ளியின் வரலாறு ஆசிரியர் ரவி வரவேற்புரையும், நிறைவாக தமிழ் ஆசிரியர் மகேந்திரன் நன்றியுரை வழங்கினர்.

Monday 22 October 2018

ஆன்லைன் வங்கி மோசடி நடக்காமல் தடுக்க ஓடிபி எனப்படும் ஒரு முறை பாஸ்வேர்டு கொண்டுவரப்பட்டது. ஆனால், மோசடியை தடுப்பதில் இதுவும் நம்பகமானது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வங்கியில் கணக்கு வைத்திருப்ேபாருக்கு வங்கியில் இருந்து அடிக்கடி ஒரு குறுஞ்செய்தி வந்துகொண்டே இருக்கும். அதாவது, ‘‘உங்கள் கணக்கு எண் மற்றும் ஏடிஎம் பாஸ்வேர்டு எண் கேட்டு வங்கியில் இருந்து பேசுவது போல யாராவது கேட்டால் அவற்றை கொடுக்க வேண்டாம்’’ என்பதுதான் அது. வங்கி மோசடிகள் பெருத்து விட்ட நிலையில், இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விழிப்புணர்வு ஊட்டுகின்றன. ஆனால் மோசடி நபர்கள் இப்போது வேறு வழிகளை கையாண்டு உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து உங்கள் பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபடுவதாக வங்கிகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனையில் பயபடுத்தப்படும் ஓடிபி எண்களை பயன்படுத்தி திருவதாக தெரிவிக்கின்றன.ஆன்லைன் பேங்கிங் முறையில் பொதுவாக ஓடிபி எண்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. ஒரே ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். அதுவும் சில நிமிடங்களிலேயே காலாவதியாகிவிடும் என்பதால் இது மிகவும் பாதுகாப்பானது என நம்பப்பட்டது. ஆன்லைன் வங்கி மோசடியில் நம்மை பாதுகாப்பது இந்த ஓடிபி நடைமுறைதான் அவ்வளவு நம்பகமான அந்த ஓடிபி எண்களுக்கும் இப்போது வந்தது ஆபத்து. காரணம் சில மோசடி நபர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் ஓடிபி எண்களை வைத்து வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன்களை ஹேக் செய்வதாக பல புகார்கள் வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது வேறு வழியில் ஏமாற்றும் வேலையில் மோசடி நபர்கள் இறங்கியுள்ளனர். அதாவது, வங்கி வாடிக்கையாளர்கள் போலவே வங்கிகளுக்கு செல்லும் மோசடிப் நபர்கள், ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் கணக்கின் எண்ணை சொல்லி அந்த கணக்கில் தரப்பட்டுள்ள விவரங்களில் உள்ள செல்போன் எண்ணை மாற்றிவிட்டதாகக் கூறி மோசடியான ஒரு செல்போன் எண்ணை கொடுக்கின்றனர். அந்த செல்போன் எண்ணுக்கு வாடிக்கையாளரின் கணக்கு எண்ணை இணைத்து விடுகின்றனர். அதற்கு பிறகு நடக்கும் பணப் பரிவர்த்தனையின் போது அந்த புதிய எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை வைத்து உங்கள் கணக்கில் இருந்து பணத்தை வேறு எண்ணுக்கு பணத்தை மாற்றிக் கொள்கின்றனர். இது போன்ற புதிய மோசடியான வழியை பயன்படுத்தி டெல்லியில் ரூ11 லட்சத்து 5 ஆயிரம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜானக்புரியை சேர்ந்த ஒருவர் மோசடியில் பணத்தை இழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வங்கிக்கு வந்த இரண்டு நபர்களில் ஒருவர், மேற்கண்ட ஜானக்புரி நபரைப் போல நடித்து தனது செல்போன் எண்ணை மாற்றி விட்டதாக கூறி புதிய எண் ஒன்றை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அதை வைத்து ஜானக்புரி நபரின் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ஓடிபி எண்ணை பயன்படுத்தி ரூ11 லட்சத்து 5 ஆயிரம் எடு்த்துள்ளார். அந்த பணத்தை துவாரகா பகுதியில் உள்ள வேறு வேறு 6 வங்கிக் கணக்கு எண்களுக்கு அந்த மோசடி நபர் பரிமாற்றம் செய்துள்ளார். பின்னர் ஏடிஎம் மூலமும் பணம் எடுத்ததுடன் செக் மூலமாகவும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. முழுப் பணத்தையும் எடுத்த பிறகு எந்த செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண்கள் வங்கியில் இருந்து போனதோ அந்த செல்போன் எண்ணை மோசடி நபர் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். பணத்தை பறி கொடுத்த ஜானக்புரி நபர் போலீசில் புகார் கொடுத்த பிறகு போலீசார் அந்த வங்கிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் பணம் பறி கொடுத்த நபரின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களையும் பெற்றனர். இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி சிசிடிவி கேமராவில் உள்ள உருவத்தை தொழில் நுட்ப அடிப்படையில் ஆய்வு செய்து ஜார்கண்டில் இருந்த ஒரு மோசடி ஆசாமியை கண்டுபிடித்தனர். இந்த மோசடியில் வங்கியில் உள்ளவர்களும் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் பரிவர்த்தனையை நம்பாத பலர் வங்கிகளுக்கே நேரடியாக சென்று பணம் எடுக்கும் முறையை கடைப்பிடித்து வருகின்றனர். இருப்பினும் நம்பகத்தகுந்த பரிவர்த்தனை என அபயம் அளிக்கும் ஓடிபி எண்கள் அபாயகரமானதாக மாறி விட்டன. பணம் வேண்டுமென்றால் நேராக வங்கிக்கே போய்விட வேண்டும் என்று உஷார் வாடிக்கையாளர்களை போலவே, எலி பட காமெடி போல மோசடி ஆசாமிகளும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர். எப்படி நடக்கிறது தில்லுமுல்லு* வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கே செல்லும் மோசடி ஆசாமிகள், வாடிக்கையாளரின் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் * மொபைல் எண்ணை மாற்றியதும், அதற்கு வரும் ஓடிபி எண்ணை வைத்து பாஸ்வேர்டையும் மாற்றி பணத்தை மொத்தமாக எடுத்து விடுகின்றனர்.* சில மோசடி பேர்வழிகள் மொபைல் நிறுவனத்துக்கு சென்று, சிம்கார்டு தொலைந்து விட்டதாக கூறி வாடிக்கையாளரின் நம்பருக்கு வேறு சிம்மை வாங்கி வந்து கைவரிசை காட்டுகின்றனர். * வங்கியில் கணக்கு வைத்திருப்போர் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.* வங்கியில் உங்கள் செல்போன் எண மாற்றுவது தொடர்பாக யாராவது தொடர்பு கொள்கிறார்களா என்றும் கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் பணம் உங்களுடையது இல்லை.

Wednesday 17 October 2018

நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் பெட்ரோல் ரூ21ம், டீசல் ரூ23ம் விலை அதிகரித்திருக்கிறது.

இது கடந்த காலங்களை விட மிக உச்சநிலை ஆகும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசலுக்கான விலையை, சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு தினமும் மாற்றி அமைத்து வருகின்றனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு வரை ஏற்ற, இறக்கத்தில் இருந்தநிலையில்,தற்போது தொடர்ந்து ஏற்ற நிலையில் மட்டும் இருக்கிறது.இதன்காரணமாக பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் கலால் வரியும் கடந்த காலங்களை விட அதிகளவு உயர்த்தப்பட்டதன் விளைவாக ஏற்றத்தை தவிர்க்க முடியாமல் திணறி வருகின்றனர். வழக்கமாக ஆண்டுக்கு பெட்ரோல், டீசல் விலை ரூ5 முதல் ரூ7 வரை அதிகரித்திருக்கும். ஆனால், கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதத்தில் இருந்து நடப்பு மாதம் (அக்டோபர்) வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ21ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ23ம் அதிகரித்திருக்கிறது. இது மிக உச்சப்பட்ச விலை ஏற்றமாகும். சேலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டர் ரூ71.11 ஆகவும், டீசல் விலை ரூ60.27 ஆகவும் இருந்தது. இதுவே நேற்றைய தினம் (16ம் தேதி) பெட்ரோல் விலை ரூ86.44 ஆகவும், டீசல் விலை ரூ80.40 ஆகவும் விற்கப்பட்டது. இது ஓராண்டில் பெட்ரோலுக்கு ரூ20.81ம், டீசலுக்கு ரூ23.24ம் உயர்ந்திருப்பதை காட்டுகிறது. இந்த விலையேற்றம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், சாதாரண மக்களும், லாரி உரிமையாளர்கள் உள்பட வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.