Thursday, 25 October 2018

வணிகவியல் மன்றம் தொடக்கவிழா மற்றும் 2ம் ஆண்டு வணிகவியல் கண்காட்சி

நேற்று 24.10.2018 கரூர் மாவட்டம் ஈசநத்தம் அரசுமேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் மன்றம் தொடக்க விழா மற்றும் 2ம் ஆண்டு வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது. 

பள்ளி தலைமை ஆசிரியர் பி.மருதைவீரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், கரூரின் மூத்த வணிகவியல் ஆசிரியருமான எம்.கந்தசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் “ வணிகவியல் பாடத்திற்கான வேலைவாய்ப்புகள் நிறையக் கொட்டிக்கிடக்கின்றன. முழு ஆர்வத்துடன் திட்டமிட்டு படித்தால் அனைவருமே வேலைவாய்ப்பை பெறலாம்” என்றார்.

மேலும் வணிகவியல் பிரிவு மாணவர்கள் படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமைகள் குறித்தும், பொதுத்தேர்விற்கு தயாராக வேண்டிய விதங்கள் குறித்தும் வணிகவியல் ஆசிரியர்கள் மகேந்திரன், அபுதாகீர், இப்பள்ளி ஆசிரியைகள் தெய்வானை, சுசீலா ஆகியோர் விளக்கினர்.

முன்னதாக இப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ப.கார்த்திகேயன் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கிப்பேசுகையில் “ பாடப்புத்தகங்களைத் தாண்டிய அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள உதவுவதோடு, செய்முறைப் பயிற்சியில்லாத வணிகவியல் பிரிவு மாணவர்களின் படைப்பாற்றலை ஆக்கப்பூர்வமான முறையில் வெளிக்கொண்டு வர இந்த வணிகவியல் மன்றம் உதவும். இதுபோன்று மன்றங்களை மேல்நிலை வகுப்புகளில் நடத்த ஊக்குவித்து வரும் பள்ளிக்கல்வித்துறைக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன் “ என்றார்.

முன்னதாக இப்பள்ளியின் வரலாறு ஆசிரியர் ரவி வரவேற்புரையும், நிறைவாக தமிழ் ஆசிரியர் மகேந்திரன் நன்றியுரை வழங்கினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.