Monday 26 November 2018

ஓட்டல்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணத்துக்கு முறையாக கணக்கு காண்பிக்கப்படுகிறதா

ஓட்டல்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணத்துக்கு முறையாக கணக்கு காண்பிக்கப்படுகிறதா  ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும்போது, நம்பிக்கைக்கு உரிய இணையதளத்தை பயன்படுத்தவும். முன்பின் தெரியாத, புதிய இணைய தளங்களில் பொருட்கள் வாங்குவது ஏமாற்றத்துக்கு வழி வகுக்கும். பாதுகாப்பான பரிவர்த்தனைக்கும் உத்தரவாதம் இருக்காது. * இணைய வங்கிச்சேவை பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பாஸ்வேர்ட் மாற்றவும். பரிவர்த்தனைக்கு பிறகு வங்கிகளில் இருந்து வரும் எஸ்எம்எஸ்களை பார்த்து உறுதி செய்யவும்.* மோசடி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம். கிரெடிட் கார்டு அல்லது டெபிட்கார்டு, வங்கி கணக்கு விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம். * ஆன்லைனில் பொருட்கள் வாங்க ஒரே டெபிட் கார்டை பயன்படுத்தவும். பிரீபெய்டு கார்டுகளும் வந்து விட்டன. * இணையதள முகவரியில் https என தொடங்குகிறதா என பார்க்கவும். S இல்லாத இணையதளங்கள் ஆபத்து. * பொது வை-பை பயன்படுத்தி எந்த பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம்.* மூன்றாம் நபர் பேமன்ட் முறையில் பணம் செலுத்துவதற்கு முன்பு, ‘வெரிசைன்’ போன்ற லோகோவை பார்க்கலாம். அதை கிளிக் செய்து இணைய சான்றை அறிந்து கொள்ளவும்.* கம்ப்யூட்டர் கீ போர்டு பயன்படுத்துவதை விட, வங்கிகள் அல்லது பேமன்ட் நிறுவனங்களின் விர்ச்சுவல் கீபோர்டு பயன்படுத்தவும். * பயர்பாக்ஸ், குரோம் என எந்த பிரவுசரை பயன்படுத்தினாலும், அதில் உள்ள ‘பிரைவேட் டேப்’ தேர்வு செய்து பயன்படுத்தவும். இவ்வாறு செய்தால் உங்கள் இணைய செயல்பாடுகள் பதிவாகாமல் தடுக்கலாம்.* வங்கி, ஷாப்பிங் உட்பட எந்த இணையதளமாக இருந்தாலும் அதில் உள்ளீடு செய்த பிறகு மறக்காமல் ‘லாக் அவுட்’ கிளிக் செய்து வெளியேறவும். வெறுமனே பிரவுசரை மூட வேண்டாம்.

ஓட்டல்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணத்துக்கு முறையாக கணக்கு காண்பிக்கப்படுகிறதா?

ஓட்டல்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணத்துக்கு முறையாக கணக்கு காண்பிக்கப்படுகிறதா என வருமான வரித்துறை தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது. ஓட்டல்களில் உணவு அருந்திய பிறகு சர்வருக்கு சிலர் டிப்ஸ் கொடுப்பத வழக்கம். இதுதவிர, பெரிய ஓட்டல்களில் சேவைக் கட்டணம் என இதை கட்டாயமாக வசூலித்து வந்தனர். இதனால் டிப்ஸ் தவிர 5 முதல் 20 சதவீதம் வரை அதிக பில்தொகை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி சேவை கட்டணம் என்பது கட்டாயம் கிடையாது. வாடிக்கையாளர்கள் சேவையில் திருப்தி அடைந்தால் அவர்களாக விருப்பத்தின்பேரில் அளிக்கலாம் என உத்தரவிட்டது. இதற்கிடையில், வாடிக்கையாளர் விருப்ப அடிப்படையில் கொடுத்த சேவை கட்டணத்தை சர்வருக்கு சில ஓட்டல் நிர்வாகங்கள் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களும் இத்தகைய சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து ஓட்டல் கணக்கு விவரங்களை கண்காணிக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில ஓட்டல்களில் பில் தொகையுடன் சேர்த்து சேவைக்கட்டணம் குறிப்பிட்ட சதவீதத்துக்கு வசூல் செய்யப்படுகிறது. இவற்றை வாடிக்கையாளருக்கு சேவை அளித்த ஊழியரிடம் அளிக்க வேண்டும். ஆனால் சில ஓட்டல்கள் இவ்வாறு செய்வதில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு ஊழியருக்கு தரப்படாவிட்டால் அவை ஓட்டல்களின் வருவாய் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். வருவாயாக காண்பித்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். இதற்கு பயந்து சில ஓட்டல்கள் கணக்கில் காண்பிப்பதில்லை அல்லது குறைவாக கணக்கில் காண்பிக்கின்றன கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு நுகர்வோர் அமைச்சகம் வருமான வரித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இதன்படி ஓட்டல்களின் வரவு, செலவு கணக்குகள், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை கட்டண விவரங்கள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜிஎஸ்டியில் 230க்கும் மேற்பட்ட பொருட்கள், சேவைகளுக்கான வரி குறைக்கப்பட்டது. இதில் ஓட்டல்களுக்கான ஜிஸ்டி 5 சதவீதம் ஆக்கப்பட்டது. இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்று வந்த புகாரின்படி ஓட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சேவை கட்டண ஏய்ப்பு பற்றி ஆய்வு செய்யப்பட இருக்கிறது என்றார்.* ஓட்டல்களில் சேவைக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, கடந்த ஆண்டு ஏப்ரலில் இதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது.* சில ஓட்டல்கள் வாடிக்கையாளர் அளித்த சேவை கட்டணத்தை ஊழியர்களுக்கு தராமலும், கணக்கு காட்டாமல் மறைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.* நுகர்வோர் அமைச்சக உத்தரவை தொடர்ந்து, இதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என ஆய்வு செய்ய வருமான வரித்துறை களம் இறங்கியுள்ளது.அரசிடம் விளக்கம் சமர்ப்பிக்க முடிவு வாடிக்கையாளர்கள் அளிக்கும் ேசவைக்கட்டணத்தில் சுமார் 75 சதவீதம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதம் 25 சதவீதம் சமையல் கருவிகள், உடைந்த கண்ணாடி பொருட்கள் போன்றவை வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளன. சராசரியாக 50 முதல் 80 சதவீத சேவைக்கட்டணம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதம் சமையல் கருவிகள், தட்டு, டம்ளர் போன்ற பரிமாறுவதற்கான சாதனங்கள் வாங்க பயன்படுத்தப்படுகின்றன. இவை உடைந்து விடுவதும் எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து அரசிடம் விளக்கம் தர இருக்கிறோம் என ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

Friday 16 November 2018

ஏடிஎம் 🏧 பயன் படுத்தும் போது கவனம் செலுத்த வேண்டிய பார்வை

புதிதாக கணக்கு துவக்கி பாஸ்புக் வாங்கியதோடு சரி. பிறகு வங்கிக்கு செல்வதே கிடையாது. பணம் வேண்டுமா? உடனே ஏடிஎம்க்கு செல்ல வேண்டியதுதான். அங்கே பின் நம்பரை போட்டு பணத்தை எளிதாக எடுக்கலாம். சிலர் இன்னும் டெபிட் கார்டை கடைகளில் பொருள் வாங்கி விட்டு பணம் செலுத்த பயன்படுத்துகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பயன்பாடு அளவுக்கு ஏடிஎம் மோசடிகளும் நாளுக்கு நாள் வெளிவருகின்றன. ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ரகசிய குறியீட்டை தெரிந்து கொண்டு போலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்து விடுகின்றனர்.பின் நம்பர் போடும்போது பிறருக்கு தெரியாமல் பயன்படுத்துங்கள். ஏடிஎம்மில் உடன் யாரையும் அனுமதிக்க வேண்டாம். வெளியில் இருப்பவர்களும் பார்க்காத வகையில் உடலால் பின் நம்பர் அழுத்தும் போர்டை மறைத்து நின்று பயன்படுத்தவும். டெபிட் கார்டுகளில் ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணத்தை பரிமாற்றம் செய்து விடுகின்றனர். இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் மேற்கொள்ளப்படுகிறது. ரூபே கார்டுகள் வெளிநாடுகளில் பயன்படுத்த முடியாதவை. மாஸ்டர், விசா கார்டாக இருந்தாலும் வெளிநாடுகளில் பயன்படுத்தும் வசதியை நிறுத்தி வைக்கும்படி வங்கியில் கோரலாம். சில வங்கிகள் இத்தகைய வசதியை அளிக்கின்றன.வங்கியில் இருந்து பேசுவதாக யார் கூறினாலும் டெபிட் கார்டு எண், ரகசிய குறியீடு, கார்டு காலாவதி தேதி போன்றவற்றை கூற வேண்டாம். வங்கிகள் ஒரு போதும் இவற்றை கேட்பதில்லை. இத்தகைய அழைப்புகள் வந்தால் உடனடியாக வங்கிகளில் புகார் செய்யவும். ரிசர்வ் வங்கிக்கும் புகார் அனுப்பலாம். ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்துவது மிக எளிது. ஆனால் மோசடி மலிந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் எச்சரிக்கை மிகவும் அவசியம்.இதுபோல் டெபிட்கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தும்போதும் கவனமாக இருக்க வேண்டும். பணம் செலுத்திய பிறகு மொபைல் நம்பருக்கு குறுந்தகவல் வருகிறதா என பார்க்கவும். அதன்பிறகும் வங்கியில் இருந்து வரும் குறுந்தகவல்களை கவனிக்கவும். உங்களுக்கு தெரியாமல் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.இதை தவிர்க்க, ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு செருகும் இடத்தில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளா என்பதை பார்க்க வேண்டும். இது முடியாவிட்டால், பரபரப்பான சாலைகளில், எந்த நேரமும் காவலாளி இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். ஸ்கிம்மர் பொருத்துபவர்கள் இத்தகைய ஏடிஎம்களில் வேலை காட்டுவதில்லை.

ஏடிஎம் 🏧 பயன் படுத்தும் நபர் கவனம் செலுத்த வேண்டிய பக்கங்கள்.

Monday 5 November 2018

Notes of lesson 2018-2019

Chkkjbb https://www.india.com/festivals-events/happy-diwali-wishes-2018-best-whatsapp-messages-gif-images-facebook-quotes-and-sms-to-send-shubh-deepavali-greetings-to-your-loved-ones-3415116/

புத்தகங்களின் சிறப்பு

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்

“உலக புத்தக தினம் இன்று"

Thursday 1 November 2018

இன்று முதல் கரூர் மாவட்டத்திற்கு வயது 24

*இன்று முதல் கரூர் மாவட்டத்திற்கு வயது 24.!!*

*கரூர் நகராட்சிக்கு 145..!*

தமிழகத்தில் 125 நகராட்சிகள் உள்ளன. இதில் 1874 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டது.

மாநகராட்சி தகுதியை எதிர்நோக்கியுள்ள நிலையில் கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டு 144 ஆண்டுகள் நிறைவடைந்து. இன்று முதல் 145 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது கரூர் நகராட்சி..!!!

அதேபோல கடந்த 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு , நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கரூர் தீரன் சின்னமலை மாவட்டம் என செயல்படத் தொடங்கியது.

1997 ஆம் ஆண்டு ஜூலை முதல் கரூர் மாவட்டம் என்ற பெயரில் செயல்படுகிறது.

தனி மாவட்டமாக கரூர் மாவட்டம் இன்று 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அடுத்த ஆண்டு வெள்ளிவிழா காண உள்ளது நமது கரூர் மாவட்டம்..!!!

கரூரின் சிறப்புகள் வீடியோ வடிவில்:
https://youtu.be/5LXU1piqQSQ

கரூர் வரலாறு: பகுதி 1
http://vetrikodikattucommerce.blogspot.com/2018/11/1.html

கரூர் வரலாறு: பகுதி 2
http://vetrikodikattucommerce.blogspot.com/2018/11/2.html

நட்புடன்
ப.கார்த்திகேயன், முதுகலை ஆசிரியர் (வணிகவியல்)
அரசு மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம்,  கரூர் மாவட்டம்.

கரூர் வரலாறு - பகுதி 2

அமராவதி நதிக்கரையில், தமிழகத்தின் மையப் பகுதியில், திருச்சிராப்பள்ளியையும், ஈரோட்டையும் இணைக்கும் இருப்புப் பாதை தடத்தில், அவ்விரு நகரங்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் நகரம் கரூர் ஆகும். கடந்த 1874ம் ஆண்டிலிருந்து கரூரானது நகராட்சியாக அங்கீரிக்கப்பட்டது. பின்னர் 1974ம் ஆண்டு முதல் முதல் நிலை நகராட்சியானது. தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக இருக்கிறது, கரூர் நகர ஒருங்கினைப்பில், கரூர் நகராட்சியோடு, இனாம் கரூர், தாந்தோன்றி போன்ற மூன்றாம் தர நகராட்சிகளும், ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 1951ம் ஆண்டில் கரூர் நகராட்சியின் மக்கள் தொகையானது சுமார் 42,155 ஆகும். கடந்த 2001ம் ஆண்டு கால வாக்கில் மக்கள் தொகையானது சுமார் 76,336 ஆக அதிகரித்தது. தற்போது 2014ம் ஆண்டு மக்கள் தொகையானது சுமார் 9,33,791 ஆக உள்ளது. பரப்பளவில் சுமார் 2.895.57 சதுர மீட்டராகும். (பார்க்க. தமிழ்நாடு அரசு இணையதளம்)

சேரர்களின் தலைநகரான வஞ்சியே இன்றைய கரூர் எனச் சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. கரூர். சோழர்களின் ஆறு தலைநகரங்களில் ஒன்றாகும்.கரூரைச் சுற்றியுள்ள ஆறு நாட்டார் மலை, சுக்காலியூர் மற்றும் ஐவர்மலை போன்ற இடங்களில் காணப்படும் சமணர் படுக்கைகள் கி.மு. மூன்றாம் நு◌ாற்றாண்டிலிருந்து, கி.பி. இரண்டாம் நு◌ாற்றாண்டு வரை இந்தப் பகுதியில் சமணம் சிறப்புற்றிருந்ததாக சான்றுகள் கூறுகின்றன.   

தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் கரூர் பசுபதிஸ்வரர் ஆலயமும் ஒன்று. பேரரசன் இராசராச சோழனின் ஆன்மிக குருவும் தஞ்சைப் பெரிய கோயிலின் லிங்கத்திருவுருவைப் பிரதிஷ்டை செய்தவரும் திருவிசைப்பா இயற்றியருவருமான கரூவூர் தேவர் அவதரித்த இடம் கரூர்.

கரூர் வரலாறு- பகுதி 1

2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.
கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.

கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

Chera Rulers:

Karur was ruled by different Chera kings. Kongu Cheras (capital:Karur (Vanji), ruling nearly the whole of old Kongu – lineage unclear- Cheran kootam) [2]

Ruler NameReignVanavaramban[430-350 BC]Kuttuvan Uthiyan Cheralathan[350-328 BC]Imayavaramban Neduncheralathan[328-270 BC]Palyaanai Chelkezhu Kuttuvan[270-245 BC]Kalangaikanni narmudicheral[245-220 BC]Perumcheralathan[220-200 BC]Kudakko Neduncheralathan[200-180 BC]Kadal Pirakottiya Velkezhu kuttuvan[180-125 BC]Adukotpattuch Cheralathan[125-87 BC]Selvak kadungo Vazhiyathan[87-62 BC]–selva cheralathan[93-still now bc]

As found in Allahabad inscriptions of Samudragupta.

கரூர் பற்றி கோடைப்பண்பலையில் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் வீடியோ வடிவம்
https://youtu.be/5LXU1piqQSQ

கரூரை ஆண்ட சேர மன்னர்களைப் பற்றி மேலும்  தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லவும்.

http://karurmakkalkalam.blog.com/வரலாற்றுக்களம்

கரூரின் சமீபத்திய தகவல்களைத் தெரிந்து கொள்ள :

http://karurmavattam.blogspot.in/

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 73 வது இடத்திற்கு முன்னேற்றம்

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழல், அன்னிய நேரடி முதலீடு, அந்த நாட்டின் வரி விதிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா 73 வது இடம் பிடித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியா 100வது இடத்தில் இருந்தது.

தற்போது 23  இடங்கள் முன்னேறி 73 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

முதலிடத்தில் நியூசிலாந்து, 2ஆம் இடத்தில் சிங்கப்பூரும், மூன்றாம் இடத்தில் டென்மார்க்கும் நான்காமிடத்தில் ஹாங்காங்கும் உள்ளன.