Monday, 26 November 2018

ஓட்டல்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணத்துக்கு முறையாக கணக்கு காண்பிக்கப்படுகிறதா?


ஓட்டல்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணத்துக்கு முறையாக கணக்கு காண்பிக்கப்படுகிறதா என வருமான வரித்துறை தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது. ஓட்டல்களில் உணவு அருந்திய பிறகு சர்வருக்கு சிலர் டிப்ஸ் கொடுப்பத வழக்கம். இதுதவிர, பெரிய ஓட்டல்களில் சேவைக் கட்டணம் என இதை கட்டாயமாக வசூலித்து வந்தனர். இதனால் டிப்ஸ் தவிர 5 முதல் 20 சதவீதம் வரை அதிக பில்தொகை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி சேவை கட்டணம் என்பது கட்டாயம் கிடையாது. வாடிக்கையாளர்கள் சேவையில் திருப்தி அடைந்தால் அவர்களாக விருப்பத்தின்பேரில் அளிக்கலாம் என உத்தரவிட்டது. இதற்கிடையில், வாடிக்கையாளர் விருப்ப அடிப்படையில் கொடுத்த சேவை கட்டணத்தை சர்வருக்கு சில ஓட்டல் நிர்வாகங்கள் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களும் இத்தகைய சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து ஓட்டல் கணக்கு விவரங்களை கண்காணிக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில ஓட்டல்களில் பில் தொகையுடன் சேர்த்து சேவைக்கட்டணம் குறிப்பிட்ட சதவீதத்துக்கு வசூல் செய்யப்படுகிறது. இவற்றை வாடிக்கையாளருக்கு சேவை அளித்த ஊழியரிடம் அளிக்க வேண்டும். ஆனால் சில ஓட்டல்கள் இவ்வாறு செய்வதில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு ஊழியருக்கு தரப்படாவிட்டால் அவை ஓட்டல்களின் வருவாய் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். வருவாயாக காண்பித்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். இதற்கு பயந்து சில ஓட்டல்கள் கணக்கில் காண்பிப்பதில்லை அல்லது குறைவாக கணக்கில் காண்பிக்கின்றன கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு நுகர்வோர் அமைச்சகம் வருமான வரித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இதன்படி ஓட்டல்களின் வரவு, செலவு கணக்குகள், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை கட்டண விவரங்கள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜிஎஸ்டியில் 230க்கும் மேற்பட்ட பொருட்கள், சேவைகளுக்கான வரி குறைக்கப்பட்டது. இதில் ஓட்டல்களுக்கான ஜிஸ்டி 5 சதவீதம் ஆக்கப்பட்டது. இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்று வந்த புகாரின்படி ஓட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சேவை கட்டண ஏய்ப்பு பற்றி ஆய்வு செய்யப்பட இருக்கிறது என்றார்.* ஓட்டல்களில் சேவைக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, கடந்த ஆண்டு ஏப்ரலில் இதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது.* சில ஓட்டல்கள் வாடிக்கையாளர் அளித்த சேவை கட்டணத்தை ஊழியர்களுக்கு தராமலும், கணக்கு காட்டாமல் மறைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.* நுகர்வோர் அமைச்சக உத்தரவை தொடர்ந்து, இதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என ஆய்வு செய்ய வருமான வரித்துறை களம் இறங்கியுள்ளது.அரசிடம் விளக்கம் சமர்ப்பிக்க முடிவு வாடிக்கையாளர்கள் அளிக்கும் ேசவைக்கட்டணத்தில் சுமார் 75 சதவீதம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதம் 25 சதவீதம் சமையல் கருவிகள், உடைந்த கண்ணாடி பொருட்கள் போன்றவை வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளன. சராசரியாக 50 முதல் 80 சதவீத சேவைக்கட்டணம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதம் சமையல் கருவிகள், தட்டு, டம்ளர் போன்ற பரிமாறுவதற்கான சாதனங்கள் வாங்க பயன்படுத்தப்படுகின்றன. இவை உடைந்து விடுவதும் எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து அரசிடம் விளக்கம் தர இருக்கிறோம் என ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.