Monday 14 January 2019

தன்னம்பிக்கை ஊட்டும் தேர்வு

தன்னம்பிக்கை ஊட்டும் தேர்வு -2

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.ஒரு இயக்குனர் ______ செயலாற்றுகிறார்.

2.இயக்குனர்கள் _________ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

3.______பகுதி இயக்குனர்கள் சுழல் முறையில் பதவி விலக வேண்டும்

4.கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் வரிசை______ எனப்படும்

5.இயக்குனர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி பங்குகளின் மதிப்பு____

6.பங்கு மாற்றம் இதில் ஈடுபட்டிருக்கிறது_____

7.இந்தியாவில் பங்குகளை விற்க பயன்படுத்தப்படும் பிரபலமான முறை _______

8._______முறையில் ஏற்கனவே இருக்கும் பழைய பங்குதாரர்களுக்கு புதிய பங்குகளை நிறுவனங்கள் வழங்குகின்றன

9.இதிலும் கெட்டதையே காண்கின்ற மனப்பாங்கு கொண்டவர் ______

10.சிறுதுளி பெருவெள்ளம் என்கிற பழமொழிக்கு ஏற்ப இருக்கும் முதலீட்டு முறை _______

11. கூட்டுறவு சங்கத்தில் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை _____

12. ஒரு கூட்டுறவு சிறப்பங்காடி அளிப்பது ______

13. மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கப்படுவது _______

14. ஜெர்மனியில் இயங்கிவந்த கூட்டுறவு ஊரக வங்கிகளின் அமைப்பு செயல்முறை ஆகியவற்றை பார்வையிட்டு நம் நாட்டில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட குழுவின் தலைவர் ______

15._____என்பது கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைக்கும் வசதி தருகிறது.

16.அரசுக்கு சொந்தமாகவும் அதன் கட்டுப்பாட்டின் கீழும் உள்ள தொழில்கள் _____ தொழில்களாகும்.

17.ஏற்கனவே தனியார் துறையில் இயங்கி வரும் தொழில்களை அரசே ஏற்று நடத்தினால் அதற்கு ______ என்று பெயர்.

18.அரசு நிர்வாகத்தில் அரசு கொண்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச பங்கு முதல் _______

19. ______ ஒரு சிலரிடம் பொருளாதார வலிமை செல்வதை தடைசெய்கிறது

20. அரசு தொழில் அமைப்புகளில் மிகவும் தொன்மையானது _______

எல்லா வினாக்களுக்கும் விடையளி

21.சட்டமுறை கூட்டம் என்றால் என்ன.?

22.பத்திரம் என்றால் என்ன.?

23.ஆண்டு பொதுக் கூட்டத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை.?

24.பங்கு மாற்றத்தின் வரைவிலக்கணம் தருக.

25.கூட்டுறவு வரையறு

26.தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சிறப்பங்காடி எடுத்துக்காட்டுகள் தருக

27. ராணுவம் சார்ந்த தொழில்களுக்கு துறைமுக அமைப்பு சிறந்தது என எதனால் கூறப்படுகிறது.?

எல்லா வினாக்களுக்கும் விடையளி

28.மாற்று இயக்குனர் என்பவர் யார்.?

29. சட்டமுறை அறிக்கையில் காண பெற வேண்டியவை யாவை.?

30.முதலீட்டாளர் ஊக வணிக வேறுபடுத்துக.

31.அரசு தொழில் என்பதன் வரைவிலக்கணம் தருக.

32.முடவாத்து என்று யாரைக் குறிப்பிடுவர்.?

33.கூட்டுறவு அமைக்க பின்பற்ற வேண்டிய முறைகளை விளக்குக.

34.பொதுத்துறை தனியார்த்துறை வேறுபடுத்துக.

எல்லா வினாக்களுக்கும் விடையளி

35.அரசு தொழில்களின் நோக்கங்கள் யாவை (ஏதேனும் ஐந்து)

36.கூட்டுறவு அமைப்பின் முக்கிய சிறப்பு இயல்புகள் யாவை.?

37.விளக்கக் குறிப்பு தருக
பகராள், குறைவெண், சட்டமுறை கூட்டம்,ஆண்டு பொதுக்கூட்டம்.

38.நிறுமச் செயலரின் பணிகளை கூறு.

39.செபியின் நோக்கம் இயல்புகள் பணிகளை விளக்கு.

40.கூட்டுப்பங்கு நிறுமம் கூட்டுறவு சங்கம் வேறுபடுத்துக.

41.ஊக வணிகர்களின் வகைகளை விவரி.