Saturday 30 June 2018

தினம் ஒரு குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல் உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.மு

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஷ்வரய்யா இரும்பாலை தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

பெங்களூரு : இரும்பு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது என சவுத்ரி பீரேந்திர சிங் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற நுகர்வோர் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சவுத்ரி பீரேந்திர சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களில் இந்தியாவில் இரும்பு உற்பத்தி குறைவாக இருந்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது. அது தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் இரும்பு தரமாக இருப்பதால் அதை கட்டுமான பணிகள், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் உட்பட உள்நாட்டு தேவைகளுக்கு அதிகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இரும்பு உற்பத்தி அதிகமாக உள்ளது. இரும்பு உற்பத்தியில் சர்வதேச அளவில் நமது நாடு 5-வது இடத்தை பிடித்துள்ளது.  வரும் நாட்களில் இரும்பு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஷ்வரய்யா இரும்பாலை தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. என்றாலும் பழமை வாய்ந்த இரும்பாலை என்பதால் அதை மூடாமல் புனரமைத்து ஒரு மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் கடும் வீழ்ச்சி அடைந்தது. வர்த்தக இடையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69.10 ஆக இருந்தது.

புதுடெல்லி: ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் கடும் வீழ்ச்சி அடைந்தது. வர்த்தக இடையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69.10 ஆக இருந்தது. மாலையில் சற்று வலுவடைந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து குறிப்பிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: ஜூலை 1ம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாட இருக்கிறது. . வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனை மதிப்ைப நிர்ணயித்து நிர்வாகம் செய்து வரும் ரிசர்வ் வங்கி மீது முழு நம்பிக்கை உள்ளது. சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியுடன் அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும். 2013ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு 68 ஆக இருந்தபோது எப்சிஎன்ஆர் - பி (வெளிநாடு வாழ் இந்தியர்கள் டாலரில் மேற்கொள்ளும் டெபாசிட்) அறிமுகம் செய்தார். இதன்மூலம் 3,200 கோடி டாலர் இந்தியாவுக்கு வந்துள்ளது. இதை நாங்கள் திரும்ப ஒப்படைத்து விட்டோம். கடந்த 5 ஆண்டாக ரூபாய் மதிப்பில் பெரிய வீழ்ச்சி இல்லை. நுண்பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போதுதான் சற்று வேறுபாடு உள்ளது. ஏனெனில் அப்போது இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு 30,400 கோடி டாலர். 2017-18 இறுதிப்படி கையிருப்பு 42,500 கோடி டாலர். இதையும் நான் கருத்தில் ெகாள்ள வேண்டும். கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க வட்டி விகிதம் போன்ற சில காரணிகளால்தான் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

ஜூலை 1ம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாட இருக்கிறது.

புதுடெல்லி: ஜிஎஸ்டியில் சிமென்ட், பெயின்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோல், 28 சதவீதத்தில் உள்ள சில பொருட்களுக்கான வரி மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் ் மேலும் சில பொருட்களுக்கு வரிகள் மாற்றி அமைக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. இந்த ஓராண்டில் வரி விதிப்பு, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் உட்பட பலவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. தொழில்துறையினர் மற்றும் மாநிலங்கள் கோரிக்கைகளுக்கு சில பொருட்களுக்கு வரி விலக்குகளும், பல பொருட்கள் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதத்துக்கும் குறைக்கப்பட்டன. கட்டுமானத்துறை மிகவும் மந்த நிலையில் உள்ளது. இந்த துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதல் கட்டமாக இந்த துறை சார்ந்த பொருட்களுக்கு வரி குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிமென்ட், பெயின்ட் ஆகியவை தற்போது 28 சதவீத வரி விதிப்பில் உள்ளன. இவற்றை குறைந்த வரி பிரிவுக்கு மாற்றுவதற்கு பரிசீலனை செய்து வருகிறோம். இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். ஜவுளித்துறை போன்றவற்றில், மூலப்பொருட்களின் மீதான வரிகள், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட அதிகமாக உள்ளன. இதனால், கூடுதலாக செலுத்திய வரியை ரீபண்ட் பெற வேண்டி உள்ளது. ஆனால், வரிகள் முழுமையாக ரீபண்ட் செய்யப்படாததால் ஜவுளித்துறையினர் இதுகுறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டபோது. 176 பொருட்கள் 28 சதவீத பிரிவில் இருந்து 18 சதவீதத்துக்கு மாற்றப்பட்டன. அப்போதே, சிமென்ட் மீதான வரியை குறைக்க பரிந்துரை முன்வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் வரி வருவாய் 20,000 கோடி குறைந்தது. இதனால் இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்து நடைபெறும் கூட்டத்தில் சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.ஜிஎஸ்டிக்கு வயது 1ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமலுக்கு வந்தது. நாளையுடன் இதற்கு ஓராண்டு நிறைவடைகிறது. இதில் மத்திய, மாநில வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 5, 12, 18, 28 என வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. முதல் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், ஜூலை 1ம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாட இருக்கிறது.

Friday 29 June 2018

தினம் ஒரு குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால் ( உணவுப் பொருள்களை உண்டாக்கும) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.மு.வ

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது

புதுடெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்கள், வருமான வரி நோட்டீசில் இருந்து தப்ப தங்கள் பாஸ்போர்ட்டில் முகவரியை மாற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதன்படி அங்கு இந்தியர்கள் செலுத்திய வரி. வருவாய் விவரங்கள் தானாக பகிர்ந்து கொள்ளப்படும். பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பெயர்களே அதிகம் இருந்தன. இதன் அடிப்படையிலும், வெளிநாடுகள் பகிர்ந்த வருவாய் விவரங்கள் அடிப்படையிலும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கு சம்மன், வருமான வரி நோட்டீஸ் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. இதில் இருந்து தப்ப, வெளிநாடு வாழ் இந்தியர்கள் புது உத்தியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, தங்கள் பாஸ்போர்ட்டில் இந்திய முகவரிக்கு பதிலாக, வெளிநாட்டில் தாங்கள் வசிக்கும் முகவரியை மாற்றி வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து அங்குள்ள வங்கிக் கணக்குகளிலும் முகவரி மாறி விடுகிறது. இந்திய முகவரியாக இருந்தால் மட்டுமே வங்கிகள் பரிவர்த்தனை விவரங்களை தானாக இந்தியாவுக்கு அனுப்பும். ஆனால், வெளிநாட்டு முகவரியை மாற்றும்போது, அந்த நபர் அந்த நாட்டில் வரி செலுத்தும் ஒருவராக கருதப்படுகிறார். அவரது விவரங்கள் வசிப்பிட முகவரி உள்ள வெளிநாட்டு அமைப்புகளுக்கே பகிரப்படும். ஒரு போதும் தானாக இந்தியாவுக்கு வராது. வங்கிகளும் இவற்றை பகிர வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் பெயர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நிறுவனங்கள், வெளிநாட்டு அறக்கட்டளைகள் முகவரியை மாற்றி விடுகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் வருவாய் விவரங்களை தானாக பகிர்வதில் இருந்து தப்பும் வழியாக இது அமைந்து விடுகிறது. இதுகுறித்து அதிகாரி கூறுகையில், ‘‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு வரி செலுத்துவதால், அந்த நாட்டின் வரி செலுத்தும் குடிமகனாக ஆகிறார். அவர் தன்னை இப்படி அடையாளப்படுத்திக் கொள்வதால் தானியங்கி முறையில் தகவல்கள் பகிரப்படாது. இவ்வாறு வரி செலுத்தும் குடிமகனாக தங்களை டையாளப்படுத்திக் கொள்ள பாஸ்போர்ட், அடையாளச்சான்று, ஓட்டுநர் உரிமம் கிரெடிட் கார்டு போன்றவற்றில் மாற்றினால் போதும்’’ என்றார்.

கருப்பு பண மீட்பு கெடுபிடிகளால் சரிந்திருந்த இந்தியர்களின் டெபாசிட் சுவிஸ் வங்கியில் மீண்டும் அதிகரித்துள்ளது

புதுடெல்லி: வெளிநாடுகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணம் 50 சதவீதத்துகு மேல் உயர்ந்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. மத்தியில் பாஜ ஆட்சி அமைத்ததும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கருப்பு பண மீட்புக்காக சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது. . அதோடு, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை பெற ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. 2015ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 59.64 கோடி சுவிஸ் பிராங்குகள் சரிந்து டெபாசிட் 121 கோடி பிராங்குகளாக (சுமார் 8,392 கோடி) குறைந்துள்ளது என அந்த அப்போது அறிவித்தது. 2006 இறுதியில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்திருந்த பணம் 650 கோடி பிராங்குகள் (23,000 கோடி) இருந்தது. 2011ல் 12 சதவீதமும் 2013ல் 42 சதவீதமும் இந்தியர்களின் டெபாசிட் அதிகரித்தது. 2006ம் ஆண்டுக்கு பிறகு 2011, 2013ம் ஆண்டுகள் தவிர பிற ஆண்டுகளில் இந்தியர்களின் டெபாசிட் சரிந்து வந்துள்ளது. இதுபோல் பண்ட் மேலாளர்கள் நிர்வகித்து வந்த இந்தியர்களின் பணம் 2014 இறுதியில் 3.79 கோடி பிராங்குகளாக இருந்தது 2015 இறுதியில் 1.08 கோடி பிராங்குகளாக சரிந்தது. அதாவது 2014 இறுதியில் 181.4 கோடி பிராங்குகளாக இருந்தது 121.76 கோடி பிராங்குகளாக குறைந்துள்ளது. நேரடி பரிவர்த்தனை மூலம் இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் 2016ல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 45 சதவீதம் சரிந்து 67.6 கோடி பிராங்குகளாக (சுமார் 4,500 கோடி) இருந்தது. கடந்த 2017ம் ஆண்டில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரின் டெபாசிட் விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியர்களின் பணம் 101 கோடி பிராங்க்குகள் (சுமார் 7,000 கோடி) என தெரிவித்துள்ளது. இதில் 99.9 கோடி பிராங்க் (6,891 கோடி) நேரடியாகவும், பண்ட் மேலாளர்கள் மூலம் 1.62 கோடி கோடி பிராங்க்குகளாகவும் (112 கோடி) உள்ளது. இதன்படி இந்தியர்களின் டெபாசிட் 50.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. கருப்பு பண மீட்பு கெடுபிடிகளால் சரிந்திருந்த இந்தியர்களின் டெபாசிட் சுவிஸ் வங்கியில் மீண்டும் அதிகரித்துள்ளது, கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானியர்கள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த தொகை 21 சதவீதம் சரிந்து 111.5 கோடி பிராங்க்காக (இந்திய மதிப்பில் 7,700 கோடி) உள்ளது.

இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ஈராக், சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக ஈரானில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. கடந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 1.84 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியதும், இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொள்ளாவிட்டால் இந்தியாவும், சீனாவும் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும். இந்த நாடுகள் தங்களின் இறக்குமதி அளவை படிப்படியாக குறைத்து, வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும்’’ என்றார். இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘அமெரிக்கா வேண்டுகோள் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மாற்று வழிகளை யோகிக்கும்படி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் பெட்ரோலியத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. தெளிவான முடிவு இன்னும் ஒரு வாரத்தில் எடுக்கப்படும்’’ என்றனர்.

தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை

ஈரோடு மாட்டுச்சந்தைக்கு நேற்று கர்நாடக விவசாயிகள் அதிகளவில் வந்து கறவை மாடுகள் வாங்கிச்சென்றனர். தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இருந்து அதிகளவில் கறவை மாடுகளை வாங்கிசெல்வதற்காக மாட்டு வியாபாரிகளும், விவசாயிகளும் வருகின்றனர். இந்த சந்தையில் விற்கப்படும் செவலை, எச்எப்., எச்எப்., கிராஸ், சிந்தி, ஜெர்சி போன்ற கலப்பின மாடுகள் இந்த மாநிலங்களின் சீதோஷ்ணநிலையை தாங்கி வளர்வதுடன், கறவைத்திறனுடன் திகழ்கிறது. இதன் காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தைக்கு 7 மாநிலங்களில் இருந்தும் வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் கறவை மாட்டுச் சந்தைக்கு மாடுகளை வாங்குவதற்காக ஈரோடு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் 375 கறவை பசு மாடுகளும், 300 எருமை, 200 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை வாங்கி செல்வற்காக நேற்று அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த வாரம் கர்நாடகாவில் இருந்து அதிகளவில் மாட்டு வியாபாரிகளும், விவசாயிகளும் மாடுகளை வாங்குவதற்காக வருகை தந்திருந்தனர். தற்போது கர்நாடகாவில் மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பி வருவதால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். தாராளமாக பசுந்தீவனம் கிடைப்பதால் அங்கிருந்து கறவை மாடுகளை வாங்கி செல்வதற்காக வியாபாரிகளும், விவசாயிகளும் அதிகளவில் வந்துள்ளனர். இதனால் நேற்று மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. மாட்டுச்சந்தை நிர்வாகிகள் கூறும்போது, இன்று ஒரேநாளில் கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு தலா 15 லோடு, தெலங்கானாவிற்கு 10 லோடு மாடுகளும் சென்றன. இதுபோக மற்ற மாநிலங்களுக்கும் அதிகளவில் மாடு லோடு சென்றது. ஒரேநாளில் 95 சதவீத மாடுகள் விற்பனையானது. பசுந்தீவனத்தட்டுபாடு நீங்கியதால் பரவலாகவே மாடுகளை வாங்கி செல்வதற்காக அதிகளவில் மாட்டு வியாபாரிகள், விவசாயிகள் வந்ததால் விற்பனை அமோகமாக இருந்தது என்றனர்.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தபால் நிலையங்களில் வங்கி சேவைகள் தொடங்க உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோஜ் சின்கா கூறினார்.

குமரி மாவட்டம் குழித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தபால் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோஜ் சின்கா தபால் நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசியதாவது: நாடு முழுவதும் 300 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவைகள் வழங்கும் பணி துவங்கியுள்ளன. ஓராண்டில் 816 தபால் நிலையங்களில் இந்த பாஸ்போர்ட் சேவை விரிவுப்படுத்தப்படும். 50 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பங்கள் கிடைக்கவும், அதற்கான சரிபார்ப்பு பணிகள் நடப்பதற்காகவும் 5 அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 216 மையங்கள் முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. தபால் சேவை மூலம் பாஸ்போர்ட் சேவை மட்டுமின்றி, வங்கி சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெறும் அளவிற்கு ஆன்லைன் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். நாடு முழுவதும் ஒரு லட்சத்து 38 ஆயிரம் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அதோடு ஒரு லட்சத்து 50 ஆயிரம் தபால் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலையங்களில் வங்கி பணிகளும் செயல்பட தொடங்கும் போது தபால் நிலையங்களின் பணி கிராமங்களில் அடித்தட்டு மக்களையும் சென்றடையும். இவ்வாறு அவர் பேசினர்.

Thursday 28 June 2018

தொழில் அதிபர் விஜயமல்லையா தனது சொத்துக்களை விற்பனை செய்கிறார்

🏢யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங் லிமிடெட், கிங்பிஷர் ✈ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிபர் 💸விஜயமல்லையா ✈லண்டனில் உள்ளார். தனது நிறுவனங்களுக்காக 🏦வங்கிகளில் கடன் பெற்ற அவர், வட்டியும் முதலுமாக 💰13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் திருப்பி செலுத்த வேண்டி உள்ளது😱. இந்நிலையில் அவர் கடனை திருப்பி தந்து விடுகிறேன்👍 என்று சமீபத்தில் ஓர் அறிவிப்பினை🔈 வெளியிட்டார். இதனை தொடர்ந்து தற்போது, அவர் தன்னுடைய 💸சொத்துக்களை விற்க அனுமதி 🙏கோரி கர்நாடக 🏛உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து

வரலாற்றிலேயே முதன்முறையாக ரூ.69 என்கிற நிலைக்கு சென்றது. வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிகமாக வாங்கி வருகின்றனர். பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிகளவில் வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் வணிகநேரம் தொடங்கியதுமே ரூபாய் மதிப்பு 28 காசுகள் வீழ்ச்சி அடைந்து இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 68 ரூபாய் 89 காசுகளாக குறைந்தது.அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் மதிப்பு மேலும் 21 காசுகள் சரிந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69 ரூபாய் என்கிற அளவைத் தாண்டியது. மொத்தத்தில் இன்று ஒரே நாளில் 49 காசுகள் சரிந்து 69 ரூபாய் 10 காசுகளாக இருந்தது. இதற்கு முன் ரூபாயின் மதிப்பு 2016 நவம்பர் 4ம் நாள் 68 ரூபாய் 73 காசுகளாக இருந்ததே மிகக் குறைந்த அளவாக இருந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பணவீக்கத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் எனப பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

NSE விலை உயர்ந்த மற்றும் குறைந்த விவரங்கள்

NSE விலை உயர்ந்த பங்குகள்

கம்பெனி பெயர்:Mahi. & Mahi தற்போதைய விலை:906.35ரூபாய். சதவீத மாற்றம்:1.53% கம்பெனி பெயர்:Infosys தற்போதைய விலை:1,286.85ரூபாய். சதவீத மாற்றம்:1.33% கம்பெனி பெயர்:Tata Steel தற்போதைய விலை:548.50ரூபாய். சதவீத மாற்றம்:.98% கம்பெனி பெயர்:Axis Bank Ltd. தற்போதைய விலை:512.40ரூபாய். சதவீத மாற்றம்:.90% கம்பெனி பெயர்:Lupin Ltd. தற்போதைய விலை:901.35ரூபாய். சதவீத மாற்றம்:.87%

NSE விலை குறைந்த பங்குகள்

கம்பெனி பெயர்:Tech Mahindra Ltd. தற்போதைய விலை:684.35ரூபாய். சதவீத மாற்றம்:-4.19% கம்பெனி பெயர்:Titan Company தற்போதைய விலை:839.55ரூபாய். சதவீத மாற்றம்:-3.46% கம்பெனி பெயர்:GAIL (India) Ltd. தற்போதைய விலை:319.80ரூபாய். சதவீத மாற்றம்:-2.74% கம்பெனி பெயர்:Hind. Petrol தற்போதைய விலை:269.60ரூபாய். சதவீத மாற்றம்:-2.53% கம்பெனி பெயர்:Bharat Petroleum தற்போதைய விலை:375.20ரூபாய். சதவீத மாற்றம்:-1.99%

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58.80 புள்ளிகள் சரிந்து 35,158.31 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32.95 புள்ளிகள் சரிந்து 10,638.45 புள்ளிகளாக உள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.52 காசுகளாக உள்ளது.

தினம் ஒரு குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாமல் பொய்படுமானால் கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.மு.வ

கடந்த 2 மாதங்களில் 2,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் வரி ஏய்ப்புகளை கண்டுபிடிக்க ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த 2 மாதத்தில் 2,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பை கண்டு பிடித்துள்ளது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுங்க மற்றும் மறைமுக வரிகள் அமைப்பின் உறுப்பினர் ஜான் ஜோசப் கூறுகையில், சிறிய வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி குழப்பமாக உள்ளது. இவர்கள் இன்னமும் தவறாக ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர். பெரிய நிறுவனங்களுக்கு கூட தவறு நிகழ்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். ஆனால், இவர்களில் ஒரு சதவீதம் பேர், அதாவது ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்கள்தான் 80 சதவீத வரியை செலுத்துகின்றனர். காம்போசிஷன் திட்டத்தில் பலன் பெறும் பலர் ஆண்டு வர்த்தகம் 5 லட்சம் என கணக்கு காட்டியுள்ளனர். கடந்த 2 மாதங்களில் ஜிஎஸ்டி செலுத்தாமல் 2,000 ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

இபிஎப் திட்ட விதியில் 68எச்எச் பத்தி புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்ற

தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று 30 நாட்களுக்கு பிஎப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவதற்கு பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிஎப் மத்திய அறக்கட்டளை வாரிய 222வது கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தலைமையில் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று 30 நாட்களுக்கு பிறகு, தங்களது பிஎப் கணக்கில் இருந்து, 75 சதவீத தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக இபிஎப் திட்ட விதியில் 68எச்எச் பத்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அறக்கட்டளை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்ட மொத்த தொகையில் இருந்து மேற்கண்ட 75 சதவீதத்தை எடுத்துக்கொள்ள முடியும். தற்போதைய விதியின்படி, வேலையில் இருந்து விலகி 2 மாதத்துக்கு பிறகே பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறது பங்குச்சந்தை இடிஎப் திட்டங்களில் 2015 ஆகஸ்ட் முதல் கடந்த மே 31ம் தேதி வரை 47,431.24 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிஎப் நிதியில் 16.07 சதவீதமாகும். அதோடு, எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட், யுடிஐ மியூச்சுவல் பண்ட் இடிஎப் முதலீடாக அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை ஓராண்டுக்கு முதலீடு செய்யவும் அறக்கட்டளை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.