புதுடெல்லி: தலைநகரில் நேற்று தங்கத்தின் விலை அதிகரித்து 10 கிராம் ரூ.31,650க்கு விற்பனையானது. உள்ளூர் வியாபாரிகள் நகை வாங்க ஆர்வம் காட்டியது மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக டெல்லியில் தங்கத்தின் விலையில் கடந்த இரு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்றும் விலையேற்றம் தொடர்ந்தது. இதையடுத்து 10 கிராம் தங்கத்தின் விலையில் ₹50 அதிகரித்து ₹31,650க்கு விற்பனையானது. ஆனால், வெள்ளியின் விலையில் ₹100 வீழ்ச்சி கண்டு ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹40,900க்கு விற்பனையானது. அதேசமயத்தில் ஆபரண தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முந்தைய விலையான 8 கிராம் தங்கம் ₹24,800க்கு விற்பனையானது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.