🏫பள்ளிக்கல்வித்துறையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் கேள்வித்தாள், புளூபிரின்ட் படி அமையாது😳. பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறவுள்ளது. மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள கேள்விகளை மட்டுமே படித்து மனப்பாடம் செய்து தேர்வு எழுதி வந்தனர்😐. இதனால் அதிக 🔢மதிப்பெண் எடுத்தாலும், போட்டி தேர்வுகளை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர்😟. இந்நிலையில் புதிய பாடத்திட்டதை எழுதுவதற்காக உருவாக்கிய குழு, புளூபிரின்ட் முறையை ஒழித்துவிட்டு🚫, மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறி பாடப்பகுதியை மட்டுமே படிக்கும் அளவிற்கு பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர்🙄.
இந்த புதிய 📚பாடத்திட்டத்தின்படி மாதிரி கேள்வி 📄தாள் ஒன்று 📆ஜூலை மாதம் வெளியிட பாடத்திட்ட குழு முடிவு செய்துள்ளது🙂. அதனால் கடந்த ஆண்டுகளில் நடந்த ✍தேர்வில் கேள்வித்தாள் தொகுப்பை மட்டும் மாணவர்கள் படித்தால், போட்டி தேர்வுக்கு தயாராக முடியாது🚫. எனவே மாணவர்கள் மனப்பாட முறையில் இருந்து மாற்றி, புரிந்து கொண்டு படிக்கும் நிலமைக்கு கொண்டுவர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும்👍, பாடத்திட்ட குழு முடிவு செய்துள்ளது😯. இத்தகைய முறை அறிமுகத்தால் மாணவர்கள் 📚பாடத்தினை முழுவதும் படித்து, புரிதல் திறன் அதிகரிக்கும். ✍'நீட்' தேர்வு போன்றவற்றையும் 👥மாணவர்கள் எளிதில் மேற்கொள்ள இது உதவும்👍.
Saturday, 16 June 2018
கல்வியில் ஒரு புதிய திட்டம், என்ன திட்டம்...?
Labels:
guna
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.