Wednesday, 13 June 2018

ஈரோட்டில் அதிகம் விற்பனை...தெரியனுமா? இதோ....

ஈரோடு கனிமார்க்கெட்டில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஜவுளிச் சந்தை நடக்கிறது. நேற்று ரம்ஜான் ஜவுளி விற்பனை களைகட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கனிமார்க்கெட் வியாபாரிகள் நேற்று கூறியதாவது: ரம்ஜான் பண்டிகையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கடைகளில் நல்ல வியாபாரம் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்த வியாபாரிகளின் வருகை குறைந்தபோதும், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக வந்து கொள்முதல் செய்துள்ளனர். ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட சேலைகள், சுடிதார் வகைகள், பள்ளிச் சீருடைகள் அதிகம் விற்பனையானது என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.