ஈரோடு செம்மாம்பாளையம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், பெருந்துறை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. கடந்த மாதம் ஒரு குவின்டால் மஞ்சள் 8,800 ஆக இருந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திடீரென 8 ஆயிரத்துக்கும் கீழே விலை சரிவடைந்தது. நேற்று ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் அதிகபட்சமாக 8,474க்கும், குறைந்தபட்சம் 5,869க்கும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சம் 7,434க்கும், குறைந்தபட்சம் 5,232க்கும் விலை போனது. பெருந்துறை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி அதிகபட்சமாக 8,474 முதல் குறைந்தபட்சமாக 7,447க்கும்,கிழங்கு மஞ்சள் அதிகபட்சம் 7,769க்கும், குறைந்தபட்சம் 6,959க்கும் ஏலம் போனது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது மஞ்சள் விலை கிட்டத்தட்ட ஒரு குவின்டாலுக்கு 800 வரை விலை உயர்ந்துள்ளது. ஈரோடு கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் அதிகபட்சமாக விரலி 8,659க்கும், குறைந்தபட்சம் 7,679க்கும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சம் 7,874க்கும், குறைந்தபட்சம் 6875க்கும் விலை போனது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.