இனி விதிக்கப்படும் இறக்குமதி வரிகளால் விலை உயராது என ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் இந்தியச் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் வகையில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் முடிவுக்கு வந்தது. முதல் கட்டமாக ஐபோன் எஸ்இ உற்பத்தி பெங்களூருவில் நடந்து வருகிறது. இருப்பினும், மிகச்சிறிய போன் என்பதால், ஐபோன் எஸ்இக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஐபோன் 6 மற்றும் 6எஸ் பிளஸ் விற்பனை இந்தியாவில் அமோகமாக நடக்கிறது. இதைத் தொடர்ந்து, ஐபோன் 6எஸ் போன் தயாரிப்பு பரிசோதனை முயற்சியாக, விஸ்ட்ரான் ஆலையில் கடந்த ஏப்ரலில் நடந்தது. இதையடுத்து, தொழில்முறை உற்பத்தி கடந்த வாரம் துவங்கியுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் இந்தியா வட்டாரங்கள் கூறியதாவது: ஐபோன் 6 எஸ்க்கு உள்ள வரவேற்பைக் கருத்தில் கொண்டு உள்நாட்டிலேயே உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஐபோன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இவை விரைவில் கடைகளுக்கு விற்பனைக்கு வரும். அதேநேரத்தில், விலையில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த போன்கள் எஸ்இ மாடலை போலவே இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்திய சந்தைத்தேவை பூர்த்தியாகும் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். மத்திய அரசு இனி இறக்குமதி வரி விதித்தால் 6எஸ் விலையில் மாற்றம் இருக்காது என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.