புதுடெல்லி: வெளிநாடுகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணம் 50 சதவீதத்துகு மேல் உயர்ந்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. மத்தியில் பாஜ ஆட்சி அமைத்ததும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கருப்பு பண மீட்புக்காக சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது. . அதோடு, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை பெற ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. 2015ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 59.64 கோடி சுவிஸ் பிராங்குகள் சரிந்து டெபாசிட் 121 கோடி பிராங்குகளாக (சுமார் 8,392 கோடி) குறைந்துள்ளது என அந்த அப்போது அறிவித்தது. 2006 இறுதியில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்திருந்த பணம் 650 கோடி பிராங்குகள் (23,000 கோடி) இருந்தது. 2011ல் 12 சதவீதமும் 2013ல் 42 சதவீதமும் இந்தியர்களின் டெபாசிட் அதிகரித்தது. 2006ம் ஆண்டுக்கு பிறகு 2011, 2013ம் ஆண்டுகள் தவிர பிற ஆண்டுகளில் இந்தியர்களின் டெபாசிட் சரிந்து வந்துள்ளது. இதுபோல் பண்ட் மேலாளர்கள் நிர்வகித்து வந்த இந்தியர்களின் பணம் 2014 இறுதியில் 3.79 கோடி பிராங்குகளாக இருந்தது 2015 இறுதியில் 1.08 கோடி பிராங்குகளாக சரிந்தது. அதாவது 2014 இறுதியில் 181.4 கோடி பிராங்குகளாக இருந்தது 121.76 கோடி பிராங்குகளாக குறைந்துள்ளது. நேரடி பரிவர்த்தனை மூலம் இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் 2016ல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 45 சதவீதம் சரிந்து 67.6 கோடி பிராங்குகளாக (சுமார் 4,500 கோடி) இருந்தது. கடந்த 2017ம் ஆண்டில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரின் டெபாசிட் விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியர்களின் பணம் 101 கோடி பிராங்க்குகள் (சுமார் 7,000 கோடி) என தெரிவித்துள்ளது. இதில் 99.9 கோடி பிராங்க் (6,891 கோடி) நேரடியாகவும், பண்ட் மேலாளர்கள் மூலம் 1.62 கோடி கோடி பிராங்க்குகளாகவும் (112 கோடி) உள்ளது. இதன்படி இந்தியர்களின் டெபாசிட் 50.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. கருப்பு பண மீட்பு கெடுபிடிகளால் சரிந்திருந்த இந்தியர்களின் டெபாசிட் சுவிஸ் வங்கியில் மீண்டும் அதிகரித்துள்ளது, கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானியர்கள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த தொகை 21 சதவீதம் சரிந்து 111.5 கோடி பிராங்க்காக (இந்திய மதிப்பில் 7,700 கோடி) உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.