Friday, 29 June 2018

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தபால் நிலையங்களில் வங்கி சேவைகள் தொடங்க உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோஜ் சின்கா கூறினார்.

குமரி மாவட்டம் குழித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தபால் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோஜ் சின்கா தபால் நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசியதாவது: நாடு முழுவதும் 300 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவைகள் வழங்கும் பணி துவங்கியுள்ளன. ஓராண்டில் 816 தபால் நிலையங்களில் இந்த பாஸ்போர்ட் சேவை விரிவுப்படுத்தப்படும். 50 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பங்கள் கிடைக்கவும், அதற்கான சரிபார்ப்பு பணிகள் நடப்பதற்காகவும் 5 அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 216 மையங்கள் முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. தபால் சேவை மூலம் பாஸ்போர்ட் சேவை மட்டுமின்றி, வங்கி சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெறும் அளவிற்கு ஆன்லைன் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். நாடு முழுவதும் ஒரு லட்சத்து 38 ஆயிரம் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அதோடு ஒரு லட்சத்து 50 ஆயிரம் தபால் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலையங்களில் வங்கி பணிகளும் செயல்பட தொடங்கும் போது தபால் நிலையங்களின் பணி கிராமங்களில் அடித்தட்டு மக்களையும் சென்றடையும். இவ்வாறு அவர் பேசினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.