தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று 30 நாட்களுக்கு பிஎப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவதற்கு பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிஎப் மத்திய அறக்கட்டளை வாரிய 222வது கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தலைமையில் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று 30 நாட்களுக்கு பிறகு, தங்களது பிஎப் கணக்கில் இருந்து, 75 சதவீத தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக இபிஎப் திட்ட விதியில் 68எச்எச் பத்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அறக்கட்டளை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்ட மொத்த தொகையில் இருந்து மேற்கண்ட 75 சதவீதத்தை எடுத்துக்கொள்ள முடியும். தற்போதைய விதியின்படி, வேலையில் இருந்து விலகி 2 மாதத்துக்கு பிறகே பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறது பங்குச்சந்தை இடிஎப் திட்டங்களில் 2015 ஆகஸ்ட் முதல் கடந்த மே 31ம் தேதி வரை 47,431.24 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிஎப் நிதியில் 16.07 சதவீதமாகும். அதோடு, எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட், யுடிஐ மியூச்சுவல் பண்ட் இடிஎப் முதலீடாக அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை ஓராண்டுக்கு முதலீடு செய்யவும் அறக்கட்டளை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.