ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க 60 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. குமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதிவரை விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. பைபர் வள்ளம், கட்டுமரங்களுக்கு தடையில்லாததால் அவை மீன்பிடித்து வருகின்றன.ஆனால் தேவையான மீன்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று வள்ளம், கட்டுமரங்களில் அதிகமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து ஏலமிட்டு விற்பனை செய்தனர். 20 கிலோ எடை கொண்ட ஒரு கூடை நெத்திலி மீன் தலா ₹ 700 வரை விலை போனது. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு ₹1000 முதல் ₹1500 வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது குளச்சலில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைப்பதால் கருவாடு வியாபாரிகள் அதை போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கினர். அவற்றை மணற்பரப்பில் பரப்பி கருவாட்டிற்காக உலர்த்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.