Thursday, 28 June 2018

கடந்த 2 மாதங்களில் 2,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் வரி ஏய்ப்புகளை கண்டுபிடிக்க ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த 2 மாதத்தில் 2,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பை கண்டு பிடித்துள்ளது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுங்க மற்றும் மறைமுக வரிகள் அமைப்பின் உறுப்பினர் ஜான் ஜோசப் கூறுகையில், சிறிய வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி குழப்பமாக உள்ளது. இவர்கள் இன்னமும் தவறாக ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர். பெரிய நிறுவனங்களுக்கு கூட தவறு நிகழ்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். ஆனால், இவர்களில் ஒரு சதவீதம் பேர், அதாவது ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்கள்தான் 80 சதவீத வரியை செலுத்துகின்றனர். காம்போசிஷன் திட்டத்தில் பலன் பெறும் பலர் ஆண்டு வர்த்தகம் 5 லட்சம் என கணக்கு காட்டியுள்ளனர். கடந்த 2 மாதங்களில் ஜிஎஸ்டி செலுத்தாமல் 2,000 ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.