Wednesday, 13 June 2018

வெள்ளி விலை உயர்ந்தது ஏன் தெரியுமா?

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம், உள்ளூர் நகை வியாபாரிகள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டாதது உள்ளிட்ட பல காரணங்களால் 2வது நாளாக நேற்றும் தங்கத்தின் விலை சரிந்தது. டெல்லியில் சுத்த தங்கத்தின் விலை ரூ150 குறைந்து 10 கிராம் ரூ31,800க்கு விற்பனையானது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி 8 கிராம் ரூ24,800க்கு விற்பனை செய்யப்பட்டது.தொழில் நிறுவனங்கள் அதிக அளவு கொள்முதல் செய்ததால் வெள்ளி விலை அதிரடியாக ரூ1,110 உயர்ந்து, கிலோ ரூ41,560க்கு விற்கப்பட்டது. வாரச்சந்தையிலும் இதன் விலை ரூ125 அதிகரித்து, கிலோ ரூ40,660க்கு விற்பனையானது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.