புதுடெல்லி: ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் கடும் வீழ்ச்சி அடைந்தது. வர்த்தக இடையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69.10 ஆக இருந்தது. மாலையில் சற்று வலுவடைந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து குறிப்பிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: ஜூலை 1ம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாட இருக்கிறது. . வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனை மதிப்ைப நிர்ணயித்து நிர்வாகம் செய்து வரும் ரிசர்வ் வங்கி மீது முழு நம்பிக்கை உள்ளது. சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியுடன் அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும். 2013ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு 68 ஆக இருந்தபோது எப்சிஎன்ஆர் - பி (வெளிநாடு வாழ் இந்தியர்கள் டாலரில் மேற்கொள்ளும் டெபாசிட்) அறிமுகம் செய்தார். இதன்மூலம் 3,200 கோடி டாலர் இந்தியாவுக்கு வந்துள்ளது. இதை நாங்கள் திரும்ப ஒப்படைத்து விட்டோம். கடந்த 5 ஆண்டாக ரூபாய் மதிப்பில் பெரிய வீழ்ச்சி இல்லை. நுண்பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போதுதான் சற்று வேறுபாடு உள்ளது. ஏனெனில் அப்போது இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு 30,400 கோடி டாலர். 2017-18 இறுதிப்படி கையிருப்பு 42,500 கோடி டாலர். இதையும் நான் கருத்தில் ெகாள்ள வேண்டும். கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க வட்டி விகிதம் போன்ற சில காரணிகளால்தான் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.