தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. அங்கு ஒரு கண்டி (355 கிலோ) கடந்த 2 நாட்களாக ரூ.49 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அவற்றை தமிழகத்திற்கு கொண்டு வர போக்குவரத்து செலவு சேர்த்தால் ரூ.50,500 ஆகிறது. இத்தகைய விலை கடந்த மே 15ம் தேதி 43,500 ஆகவும், ஜூன் 10ம் தேதி ரூ.48 ஆயிரமாகவும் இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் ரூ.7 ஆயிரம் அதிகரித்துள்ளது. விலை உயர்வால் நூற்பாலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பின்னலாடை வர்த்தகம் 3 ஆயிரம் கோடி சரிந்துள்ள நிலையில், விசைத்தறி துணி வர்த்தகம் விற்பனையாகாமல் ரூ.500 கோடி துணிகள் தேக்கமடைந்துள்ள நிலையில், தற்போதைய நூல் விலை மற்றும் பஞ்சு விலை உயர்வு, மேலும் ஜவுளித்தொழிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜவுளி பொருள் உற்பத்தி துறையினர் கூறுகையில், ‘உள்நாட்டில் உயர்ந்து வரும் பஞ்சு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜவுளித்தொழில் மேலும் பாதிக்கப்படும், சங்கிலித் தொடராய் அனைத்து ஜவுளி தொழிலும் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது’ என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.