Saturday, 16 June 2018

மழையால் உற்பத்தி பாதிப்பு 1,400 டன்

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பெய்து வரும் மழையால், 1,400 டன்  உற்பத்தி முடங்கியது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, நெகமம், உடுமலை, பெதப்பம்பட்டி, மடத்துக்குளம் பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட களங்களில், கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தினமும் 250 டன் கொப்பரை உற்பத்தியாகும். கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை சுட்டெரித்த வெயிலால் கொப்பரை உற்பத்தி விறுவிறுப்பாக நடந்தது. இருப்பினும், இளநீர் தேவை அதிகமானதால் தேங்காய் கிடைக்காமல் கொப்பரை உற்பத்தி தினசரி 150 டன்களாகக் குறைந்தது. மே மாதம் கோடை மழை காரணமாக தேங்காய்களை உலர வைக்க முடியவில்லை. இதனால் கொப்பரை உற்பத்தி தினசரி 100 டன்களாகச் சரிந்தது. இந்த மாதம் துவக்கத்தில் இருந்தே கோவை மாவட்டத்தில் பரவலாகவும், திருப்பூர் மாவட்டத்தில் ஓரளவும் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. இதனால் கொப்பரை உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த 2 வாரத்தில் சராசரியாக 1,400 டன்கள் கொப்பரை உற்பத்தி முடங்கியது. இதனால், தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என கொப்பரை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.