Friday, 15 June 2018

நிதி அதிகாரி நம்ம (தமிழ் நாடு)வீட்டு முதல் பெண்

 ஹூஸ்டன்: தமிழகத்தை சேர்ந்த பெண், ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் இந்த பதவியில் அமர்த்தப்படும் முதல் பெண் இவர். அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சக் ஸ்டீவன் உள்ளார். இந்த பதவியில், ஜெனரல் மோட்டார்சின் கார்ப்பொரேட் நிதி பிரிவு துணை தலைவராக உள்ள திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்ட்டுள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்கிறார் என, ஜெனரல் மோட்டார்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.39 வயதான திவ்யா சூர்யதேவரா, சென்னையில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம், எம்.காம் படித்தார். 22 வயதில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் நிதி ஆலோசகர் உள்ளிட்ட பணிகளில் பிற நிறுவனங்களில் பணியாற்றிய இவர், ஜெனரல் மோட்டார்சில் 2005ம் ஆண்டு சேர்ந்தார். 2017 ஜூலையில் இருந்து ஜெனரல் மோட்டார்சின் கார்ப்பொரேட் பைனான்ஸ் துணை தலைவராக உள்ளார். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள மேரி பர்ரா உள்ளார். ஆட்டோமொபைல் துறையில் இந்தகைய உயர் பதவியில் உள்ள பெண்கள் இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.