கொல்கத்தா: ஏற்றுமதியாளர்களுக்கு ₹25,000 கோடி நிலுவையில் உள்ளதாகவும், ஜிஎஸ்டி ரீபண்ட் வழங்கும் சிஸ்டம் சரியில்லை எனவும் மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.மேற்கு வங்கத்தில் நடந்த உலக அளவிலான வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா கூறியதாவது: நாடு முழுவதும் ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டி ரீபண்ட் கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சுமார் 3 லட்சத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. இதன்படி மொத்தம் ₹25,000 கோடி நிலுவையில் உள்ளது. ஜிஎஸ்டி ரீபண்ட் கோரி வரும் விண்ணப்பங்கள் தானியங்கி முறையில் சரிபார்க்கப்படுகின்றன. ஆனால், இது சரிவர செயல்படவில்லை. அதிகாரிகளே ஒவ்வொரு விண்ணப்பமாக சரிபார்த்து வழங்கி வருகின்றனர். இதனால் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இது ஏற்றுமதியாளர்களின் செயல் மூலதனத்தை முடக்கியுள்ளது. மாநிலங்களுக்கு சராசரியாக 35 முதல் 40 சதவீதம் ரீபண்ட் விண்ணப்பங்கள் மட்டுமே ஊழியர்கள் மூலம் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்திலும் இதே நிலைதான். ஜிஎஸ்டி செயல்பாட்டில் உள்ள இத்தகைய பிரச்னைகள், குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்புவேன் என்றார். அமித் மித்ரா, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக உள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.