வரலாற்றிலேயே முதன்முறையாக ரூ.69 என்கிற நிலைக்கு சென்றது. வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிகமாக வாங்கி வருகின்றனர். பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிகளவில் வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் வணிகநேரம் தொடங்கியதுமே ரூபாய் மதிப்பு 28 காசுகள் வீழ்ச்சி அடைந்து இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 68 ரூபாய் 89 காசுகளாக குறைந்தது.அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் மதிப்பு மேலும் 21 காசுகள் சரிந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69 ரூபாய் என்கிற அளவைத் தாண்டியது. மொத்தத்தில் இன்று ஒரே நாளில் 49 காசுகள் சரிந்து 69 ரூபாய் 10 காசுகளாக இருந்தது. இதற்கு முன் ரூபாயின் மதிப்பு 2016 நவம்பர் 4ம் நாள் 68 ரூபாய் 73 காசுகளாக இருந்ததே மிகக் குறைந்த அளவாக இருந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பணவீக்கத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் எனப பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.