Saturday, 16 June 2018

கோடிகளில் விற்பனை செய்த வாரச்சந்தை..

நேற்று நடந்த வாரச்சந்தையில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகின. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்திபஜார் அருகே சந்தைமேடு திடலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதால் நேற்று சந்தைமேடு திடலில் சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதற்காக, அதிகாலை 3 மணியில் இருந்தே செங்கம், திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம், சேத்துப்பட்டு, தேசூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்பட்டன. சென்னை, புதுச்சேரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். மேலும், இஸ்லாமியர்கள் பலரும் நேரடியாக சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கிச்சென்றனர். வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பாடு, மேப்பேறி ஆடுகள் விற்கப்பட்டன. ஒரு வெள்ளாடு ₹8 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடு ₹8 ஆயிரம் முதல் ₹12 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது. மாடுகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு மாடு ₹30 ஆயிரம் முதல் ₹40 ஆயிரம் வரை விற்கப்பட்டது. அதிகாலை 3 மணி வரை காலை 10 மணி வரை ஆடு விற்பனை ₹3 கோடிக்கு நடைபெற்றது. இதுபோல், ₹1 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆகின.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.