Wednesday, 20 June 2018

நிதிமோசடி..கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரம்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் 13,000 கோடி மோசடி உட்பட சில மோசடி சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற விஷயங்கள் குறித்து பொதுத்துறை வங்கி தலைமை அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. இதில் மத்திய அரசு நூறு சதவீதம் உறுதியாக உள்ளது. நிதி மோசடிகள் தனியார் நிறுவனங்களில்தான் அரங்கேறுகின்றன. பொதுத்துறை வங்கிகளில் இவ்வாறு நடப்பதில்லை. தனியார் வங்கிகளில் உள்ள பணம் எந்த அளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. பொதுத்துறை வங்கிகள் நேர்மையாக பணத்ைத திருப்பிச் செலுத்தும் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.பொதுத்துறை வங்கிகளைக் கட்டுப்படுத்துவதில் போதுமான அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை என, இதன் கவர்னர் உர்ஜித் படேல் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதுபற்றி குறிப்பிட்ட பியூஷ்கோயல், ‘‘ரிசர்வ் வங்கிக்குப் போதுமான அளவு அதிகாரம் உள்ளது. இன்னும் தேவை என்றால் அதை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.