மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு டெல்லியில் புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது: எனது அரசு அமைந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் செய்யும் முறை எளிமையாக்கப்பட்டு உள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை போன்ற குறியீடுகள் கட்டுக்குள் உள்ளன. இதனால், 2017-18 நிதியாண்டின் கடைசி பகுதியில் நமது நாட்டின் வளர்ச்சி குறியீடு 7.7 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆனால், நாம் இந்த நேரத்தில் 7 முதல் 8 சதவீத வளர்ச்சியை, ஜிடிபி.யை இரட்டை இலக்கமாக உயர்த்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அமெரிக்காவின் ரூ.338 லட்சம் கோடி வர்த்தகத்தை நாம் முந்த வேண்டும். அதை நாம் எப்போது எட்டிப் பிடிப்போம் என்று உலகமே இந்தியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலக வர்த்தகத்தில் நமது பங்கை இரண்டு மடங்காக உயர்த்த எனது அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. எனவே, இறக்குமதியை குறைக்க வேண்டும். எண்ணெய் உட்பட பல்வேறு இறக்குமதி பொருட்களின் தேவையை நமது வளத்தில் இருந்து பெற்று, தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மறைமுக வரி விகிதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது புதிதாக 54 லட்சம் பேர் வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்துள்ளனர். மறைமுக வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி விட்டது. ஜிஎஸ்டி.க்கு முன் 60 லட்சம் பேர்தான் மறைமுக வரியை செலுத்தி வந்தனர். இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.