இந்தியா, தென்கொரியா, வங்கதேசம், லாவோஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிடம் இருந்து சோயா பீன்ஸ் உள்ளிட்ட பொருட்களை சீனா இறக்குமதி செய்கிறது. தற்போது இவற்றுக்கு 3 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், சோயா பீன் இறக்குமதி வரியை வரும் 1ம் தேதியிலிருந்து நீக்குவதாக சீன நாடாளுமன்றம் நேற்று அறிவித்துள்ளது. இதேபோல, ரசாயன பொருட்கள், மருத்துவ பொருட்கள், துணிமணிகள், இரும்பு மற்றும் அலுமினியம் ஆகிய பொருட்களுக்கும் சீனா இறக்குமதி வரியை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆசிய - பசிபிக் வர்த்தக உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோயாபீன் அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. இங்கு கால்நடைகளுக்கு இது தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து சீனா சோயாபீன்ஸ் இறக்குமதி செய்கிறது. கடந்த ஆண்டு இங்கிருந்து 1,400 கோடி டாலர் மதிப்பிலான சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யப்பட்டது. சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறோர்.இதுபோல், இந்தியாவும் வர்த்தக பற்றாக்குறையை போக்க முயன்று வருகிறது. இந்நிலையில் அதிரடி வரி குறைப்பை சீனா அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.