Thursday, 14 June 2018

நேற்று வெள்ளி விலை உயர்ந்து தங்கம் குறைந்தது

2 நாள் சரிவுக்கு பின் நேற்று தங்கம் விலை ரூ.150 உயர்ந்தது. உலகளாவிலான மாற்றம், உள்ளூர் நகை வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்கம் வாங்கி குவிக்க ஆர்வம் காட்டியது உள்ளிட்ட காரணங்களால், இரு நாள் சரிவுக்கு பின் நேற்று தங்கம் விலை உயர்ந்தது. டெல்லியில் சுத்த தங்கத்தின் விலை ரூ.150 அதிகரித்து 10 கிராம் ரூ.31,950க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் ஆபரண தங்கத்தின் (8 கிராம்) விலை எவ்வித மாற்றமின்றி முந்தைய நாள் விலையான ரூ.24,800க்கு விற்கப்பட்டது. வெள்ளி உலோகத்தையும் தொழில் நிறுவனங்கள் வாங்கி செல்ல முன்வராததால் நேற்று அதன் விலை ரூ.10 குறைந்து, கிலோ ரூ.41,550க்கு விற்பனையானது. வாரச்சந்தையிலும் இதனை விலை ரூ.40 குறைந்து கிலோ ரூ.40,620க்கு விற்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.