Sunday, 24 June 2018

விழிப்புணர்வு கட்டுரை 📚 படிக்க பயன் பெருக..

கார்களில், டீசல் கார், பெட்ரோல் கார் என இரண்டு விதமாக இருப்பதால், பெட்ரோல் காரில் டீசலை போடுவது, டீசல் காரில் பெட்ரோலை போடுவது என இந்த குழப்பம் அடிக்கடி நடந்துவிடுகிறது. பலர் தெரியமால் மாற்றிப்போட்டுவிட்டு பெரும் சிக்கலுக்கு உள்ளாகி விடுகின்றனர். நவீன கார்கள் மிகவும் சென்சிடிவ் ஆனது. தவறான எரிபொருள் இன்ஜினுக்குள் சென்றுவிட்டால் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். நீங்கள் தவறான எரிபொருளை நிரப்பியது, எரிபொருளை நிரப்பிய உடனேயே உங்களுக்கு தெரிந்துவிட்டால் காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். மாறாக, அங்கிருப்பவர்களின் உதவியுடன் காரை நகர்த்தி ஒரு ஓரமாக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, சர்வீஸ் சென்டருக்கு கால் செய்யுங்கள். அவர்கள், உங்கள் காரின் டேங்க் மற்றும் இன்ஜினை கழற்றி, சுத்தமாக கிளீன் செய்து, பாதிப்பில்லாமல் மீண்டும் பொருத்தி கொடுப்பார்கள். அதன்பின் நீங்கள் தேவையான எரிபொருளை வழக்கம்போல் பயன்படுத்தலாம். ஒருவேளை, பெட்ரோல் பங்கிலேயே நீங்கள் கவனிக்காமல் காரை எடுத்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அதன் அறிகுறிகள் இதோ...„ டீசல், பெட்ரோலைவிட அதிக பிசுபிசுப்பு தன்மையும், அதிக அடர்த்தியும் கொண்டது. பியூயல் பில்டருக்கு செல்லும்போது அதில் பெரும்பாலான பகுதியில் டீசல் அடைத்து விடும். மீதம் இருக்கும் இடம் வழியாக கம்பஷன் சேம்பருக்குள் சென்று, கம்பஷன் நடந்து எக்ஸாட் வழியாக வெள்ளை கலரில் புகை வெளியேறும். „ பெட்ரோல் இன்ஜின் ஸ்பார்க் பிளக்கால், டீசலை முழுமையாக எரிக்க முடியாது. இவ்வாறாக கம்பஷன் நடக்கும்போது இன்ஜினில் அடைப்புகளும், ஜெர்க்குகளும் ஏற்படும். இதன்மூலம் நீங்கள், காரில் தவறான எரிபொருள் அடைக்கப்பட்டிருப்பதை உணரலாம். „ ஆனால், டீசல் காரில் பெட்ரோலை போட்டுவிட்டால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. டீசல் இன்ஜினில் சில எரிபொருளை இன்ஜெக்ட் செய்ய பல மெக்கானிஷம் சார்ந்த பொருட்கள் இருக்கும். மேலும், டீசலைவிட பெட்ரோல் எளிதில் தீப்பற்றக்கூடியது. இன்ஜினுக்குள் சென்றவுடன் பிரஷ்ஷர் ஏற்பட்டு எரியும். „ ஆனால், சில கி.மீ சென்ற பின்தான் அதன் அறிகுறி நமக்கு தெரியும். அடர் கருப்பு நிறத்தில் புகை வெளியேறும். பொதுவாக ஸ்பார்க் இல்லாமல் பெட்ரோல் எரியாது. ஆனால், டீசல் பிரஷரிலேயே எரியக்கூடியது. இதனால, டீசல் காரில் போடப்பட்ட பெட்ரோல் எரியாமலேயே உள்ளே தங்கிவிடும். தொடர்ந்து காரை இயக்க முயற்சித்தால் இன்ஜின் செயல் இழந்துவிடும். „ இவ்வாறான நேரங்களில் நீங்கள் முன்னதாகவே உணர்ந்து இன்ஜினை நிறுத்திவிட்டால் இன்ஜின் பாழாவதில் இருந்து தப்பிக்கலாம். அத்துடன், டேங்கில் உள்ள ஒட்டுமொத்த தவறான எரிபொருளை மெக்கானிக் ஒரு சொட்டுகூட விடாமல் நீக்கிவிடுவார். தவறான எரிபொருள் இன்ஜினிற்குள் செல்லாமல் தவிர்க்கப்படும். „ அவ்வாறு டீசல் இன்ஜினுக்குள் சென்றுவிட்டாலும், மெக்கானிக் முழு இன்ஜினையும் கழற்றி அதில் உள்ள தவறான எரிபொருள் ஒரு சொட்டுகூட இல்லாத அளவிற்கு எடுத்து விடுவார் அதன்பின் சரியான எரிபொருளை நிரப்பிவிட்டு சென்றால் எந்த பிரச்னையும் இல்லாமல் கார் இயங்கும். „ அதே நேரத்தில், இவ்வாறாக நடந்துவிட்டால் பெட்ரோல் இன்ஜின் பியூயல் பில்டர் மற்றும் ஸ்பார்க் பிளக்கை மாற்றவேண்டும். டீசல் இன்ஜினை பொருத்தவரை இன்ஜினுக்கு கீழே உள்ள பிளக் மூலம் அதில் உள்ள எரிபொருளை ஒரு சொட்டுவிடாமல் வெளியேற்றி விட்டு, பின்னர் டீசலை நிரப்பி பயன்படுத்த வேண்டும். நன்றி தினகரன் நாளிதழ்

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.