ஜாப் ஒர்க் மேற்கொள்ளும் குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி தற்காலிக விலக்கு இம்மாதத்துடன் முடிகிறது. இதனால் அடுத்த மாதம் முதல் மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும் நிலைக்கு குறுந்தொழில் கூடங்கள் தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறையில், ரூ.20 லட்சத்திற்கு கீழ் ஜாப் ஒர்க் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ரூ.20 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில் ஜாப் ஒர்க் மேற்கொள்ளும் குறுந்தொழில் கூடங்கள் 30 ஆயிரத்திற்கு மேல் உள்ளன. இதில் 70 சதவீத அளவான 21 ஆயிரம் தொழிற்கூடங்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு கீழ் வர்த்தகம் மேற்கொள்பவை. அவற்றிற்கு பொருள் உற்பத்தி நிறுவனங்கள் ஜாப் ஒர்க் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட குறுந்தொழில் கூடங்கள், வேலை வாய்ப்பை பெறுவதற்காக 15 சதவீத குறுந்தொழில் கூடங்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்து, ஜாப் ஒர்க்கை பெற துவங்கின. எனினும் மீதமுள்ள 55 சதவீத குறுந்தொழில் கூடங்கள் ஜாப் ஒர்க் கிடைக்காமல் பாதிக்கப்பட்டன. இதனால் கடந்த டிசம்பர் மற்றும் மார்ச்சில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் குழு வெளியிட்ட அறிவிப்பில் ரூ.20 லட்சத்திற்கு கீழ் வர்த்தகம் மேற்கொள்ளும் குறுந்தொழில் கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கொடுக்கும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், 18 சதவீத வரி செலுத்த ஜூன் வரை தற்காலிக விலக்கு அளித்தனர். எனினும் இதனால் 5 சதவீத குறுந்தொழில் கூடங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்தன. நிரந்தரமாக விலக்கு அளித்தால் குறுந்தொழில் கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கொடுப்போம், என்று பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன. இதனால் 50 சதவீத குறுந்தொழில் கூடங்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், இம்மாதத்துடன் தற்காலிக விலக்கு முடிவடைவதால், வரும் ஜூலை முதல் மீண்டும் 55 சதவீத குறுந்தொழில் கூடங்களுக்கு ஜாப் ஒர்க் கிடைக்காமல், தொடர்ந்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ‘ரூ.20 லட்சத்திற்கு கீழ் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஜாப் ஒர்க் கொடுக்கும் நிறுவனங்களுக்கு 18 சதவீத வரியில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளித்தால் மட்டும் குறுந்தொழில்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.